Class 11 | MATHS |
Chapter | Model Paper 3 |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 42 |
Academic Year | 2023-24 |
மூன்று உறுப்புகள் கொண்ட ஒரு கணத்தின் மீதான தொடர்புகளின் எண்ணிக்கை
இயல் எண்களின் அனைத்துக்கணம் `NN`-க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில், `A'cup[(AcapB)cupB']` என்பது
`|x+2|le9`, எனில், x அமையும் இடைவெளி
`log_3frac{1}{81}`-ன் மதிப்பு
`x^2+ax+b=0` இன் மூலங்கள் `tanalpha` மற்றும் `tanbeta` எனில், `frac{sin(alpha+beta)}{sinalphasinbeta}` இன் மதிப்பு
`frac{sin(A-B)}{cosAcosB}+frac{sin(B-C)}{cosBcosC}+frac{sin(C-A)}{cosCcosA}=`
`.^(a^2 - a)C_2 = a^2 - ^aC_4` எனில் a -ன் மதிப்பு
`frac{1}{2!}+frac{1}{4!}+frac{1}{6!}+.......`-ன் மதிப்பு
`1/sqrt3, 1/(sqrt3 + sqrt2), 1/(sqrt3 + 2sqrt2), ...` என்ற தொடர் முறை
சரியான கூற்றை தேர்வு செய்க :
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
பொருத்துக :
`[[e^(x-2),e^(7+x)],[e^(2+x),e^(2x+3)]]` என்பது ஒரு பூஜ்ஜியக் கோவை அணி எனில், x-ன் மதிப்பு
பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க :
`veca` மற்றும் `vecb`-ஐ அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரம் ABCD-ன் ஒரு மூலைவிட்டம் `veca+vecb` எனில் மற்றொரு மூலைவிட்டம் `vecBD` ஆனது.
`lim_(xrarr0) (sqrt(1-cos2x)/x)`
`lim_(xrarr3)`⌊`x`⌋`=`
`f(x)=x+2` எனில்,x=4-ல்`f'(f(x))`-ன் மதிப்பு
கூற்று (A): ஒரு பகடையை உருட்டும் போது 7 என்ற எண் கிடைக்கிறது காரணம் (R): பகடையில் 1, 2, 3, 4, 5, 6 ஆகிய எண்கள் மட்டுமே இருக்கும்
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கான நிகழ்தகவு முறையே 0.3 மற்றும் 0.6 ஆகும். A மற்றும் B ஒரே சமயத்தில் நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.18 எனில் A அல்லது B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
"ஒரு கணத்திலுள்ள ஓர் உறுப்பு எப்பொழுதும் தன் கணத்திற்கே உட்கணமாக அமையாது" என்ற கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்க.
`AtimesA` என்ற கணத்தில் 16 உறுப்புகள் உள்ளன. மேலும் அதிலுள்ள இரு உறுப்புகள் (1,3) மற்றும் (0,2) எனில் A-ன் உறுப்புகளைக் காண்க.
`30^@` கோணத்தை ஆரையன் அளவுகளில் மாற்றுக.
ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
ஈருறுப்புத் தேற்றத்தைப் பய்ன்படுத்தி `(1.01)^1000000` மற்றும் 10000 ஆகியவற்றில் எது பெரியது எனக் காண்க.
5x - 4y + 3 = 0 என்ற கோட்டிற்கு இணையாக, x-அச்சின் வெட்டுத்துண்டு 3 எனக் கொண்ட நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
மதிப்பினைக் காண்க. `4! + 5!`
n(P(A))=1024`n(AcupB)=15`மற்றும் n(P(B))=32 எனில்`n(AcapB)` காண்க.
`23x<100`-ன் தீர்வை `x inNN`-க்கு காண்க
2, 4, 6, 8 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி எத்தனை 3- இலக்கு எண்களை. இலக்கங்கள் திரும்ப வருமாறு காணாலாம்.
2, 4, 6, 8 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி எத்தனை 3- இலக்கு எண்களை. இலக்கங்கள் திரும்ப வராதவாறு காணாலாம்.
a மற்றும் b என்பவை வெவ்வேறு முழுக்கள் எண்கள் எனில், n என்ற மிகை முழு எண்ணிற்கு `a^n - b^n`-ன் ஒரு காரணி a-b என நிறுவுக. (குறிப்பு: `a^n=(a-b+b)^n`என எடுத்து விரிவுபடுத்துக)
3x + 2y + 9 = 0 மற்றும் 12x + 8y -15 = 0 ஆகியவை இணைகோடுகள் எனக் காட்டுக.
தீர்க்க: `1/5|10x-2|<1`
ஒரு தளத்திலுள்ள அனைத்து முக்கோணங்களின் கணத்தை P என்போம். P-ல் R என்ற தொடர்பானது "a ஆனது bன் வடிவொத்தமாக இருப்பின் aRb" என வரையறுக்கப்படுகிறது. R என்பது சமானத் தொடர்பு மா நிறுவுக.
ஒரு நகரத்தில், வைரஸ் நோயினால் ஏற்பட்ட சுகாதார கேட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த நோய் தாக்கும் வைரஸ் கிருமிகள் ஒரு பெருக்குத் தொடர் முறையில் பரவி வருகிறது. இந்த தொற்று கிருமிகள் ஒவ்வொரு நாளும் அதன் முந்தைய நாளைப் போல் இருமடங்காக பெருகுகிறது. முதல் நாளில் அதன் எண்ணிக்கை 5 எனில், அந்த கிருமிகளின் எண்ணிக்கை எந்த நாளில் 1,50,000-க்கு அதிகமாக இருக்கும் எனக் காண்க.
`4x^2 + 4xy + y^2 - 6x - 3y - 4 = 0` என்ற இரட்டை நேர்க்கோடுகள் இணையானவை எனக் காட்டுக. மேலும், இவ்விரு கோடுகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் காண்க.
`12x^2 + 7xy - 12y^2 - x + 7y +k = 0`என்ற சமன்பாடு இரட்டை நேர்கோட்டுகளின் சமன்பாட்டைக் குறித்தால் k-ன் மதிப்பைக் காண்க. மேலும் அவை இணையா? அல்லது வெட்டிக் கொள்பவையா? எனக் காண்க.
ஒரே தளத்தில்`f(x)=x^(3)` மற்றும்`g(x)=root(3)(x)` சார்புகளை வரைபடமாக்குக.`fog`ஐ கணித்து அதே தளத்தில் வரைபடமாக்குக.முடிவுகளை ஆய்வு செய்க.
`y=frac{2sinalpha}{1+cosalpha+sinalpha}` எனில், `frac{1-cosalpha+sinalpha}{1+sinalpha}=y` என நிறுவுக .
நுண்ணுயிர் வளர்ச்சியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையானது அதன் முந்தைய மணி நேரத்தில் உள்ளது போல் இரு மடங்காகிறது. ஆரம்பத்தில் 30 நுண்ணுயிர்கள் இருக்குமானால் 2ஆவது 4ஆவது மற்றும் n ஆவது மணிநேர முடிவில் எத்தனை நுண்ணுயிர்கள் இருக்கும்.
ஆய அச்சுகளூக்கு இடையே ஒரு கோட்டுத் துண்டின் மையப்புள்ளி P(r, c) எனில் அந்த நேர்க்கோட்டின் `x/r + y/c = 2` எனக் காட்டுக.
EXERCISE questions and complete solutions for chapter Model Paper 3 of SURA MATHS (TAMIL) of Class 11