Class 12 | MATHS |
Chapter | வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
ஆதிப்புள்ளியிலிருந்து t வினாடிகளுக்குப் பிறகு ஒரு துகள் உள்ள தூரத்தின் அளவு `s=2t^2+3t` மீட்டர் எனும்படி நேர்க்கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. t=3 மற்றும் t = 6 வினாடிகளுக்கிடையே உள்ள சராசரி திசைவேகம் என்ன?
ஆதிப்புள்ளியிலிருந்து t வினாடிகளுக்குப் பிறகு ஒரு துகள் உள்ள தூரத்தின் அளவு `s=2t^2+3t` மீட்டர் எனும்படி நேர்க்கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. t=3 மற்றும் t = 6 வினாடிகளுக்கிடையே உள்ள கணப்பொழுது திசைவேகம் என்ன?
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் `s=16t^2` ஆகும். தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி விழ எடுத்துக்கொண்ட நேரம் என்ன?
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் `s=16t^2` ஆகும். கழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் திசைவேகம் என்ன ?
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் `s=16t^2` ஆகும். தரையைத் தொடும் போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?
`s(t)=2t^3-9t^2+12t-4`, இங்கு `tge0` எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. எந்நேரங்களில் துகளின் திசைமாறுகின்றது?
`s(t)=2t^3-9t^2+12t-4`, இங்கு `tge0` எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. முதல் 4 வினாடிகளில் துகள் பயணித்த தூரம் என்ன?
`s(t)=2t^3-9t^2+12t-4`, இங்கு `tge0` எனும் விதிப்படி ஒரு கோட்டில் ஒரு துகள் நகர்கிறது. திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும் நேரங்களில் எல்லாம் துகளின் முடுக்கம் காண்க?
x பக்க அளவு கொண்ட ஒரு கன சதுரத்தின் கன அளவு `v=x^3` எனில் x =5 அலகுகள் எனும் போது X -ஐப் பொறுத்து கன அளவு மாறுவீதம் காண்க.
x நீளமுள்ள (மீட்டரில்) ஒரு மெல்லிய கோலின் நிறை m(x) (கிலோகிராமில்), m(x)= `sqrt(3x)` எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், x = 3 மற்றும் x=27 மீட்டர் எனும் போது நீளத்தைப் பொறுத்து நிறையின் மாறுபாட்டு வீரத்தை காண்க.
ஒரு குளத்தில் விழுந்த கல்லினால் பொது மைய வட்டங்களின் வடிவத்தில் சிற்றலைகள் ஏற்படுகின்றது. வெளிப்புற சிற்றலையின் ஆரம் r வினாடிக்கு 2 செ.மீ வீதம் அதிகரிக்கிறது. ஆரம் 5 செ.மீ. எனும் பொது கலங்கும் நீரின் பரப்பளவு மாறுவீதம் என்ன?
தலை கீழாக வைக்கப்பட்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வடிவில் உள்ள ஒரு நீர்நிலைத் தொட்டியின் ஆழம் 12 மீட்டர் மற்றும் மேலுள்ள வட்டத்தின் ஆரம் 5 மீட்டர் என்க . நிமிடத்திற்கு 10 கன மீட்டர் வேகத்தில் நீர் பாய்ச்சப்படுகிறது எனில், 8 மீட்டர் ஆழத்தில் நீர் இருக்கும் போது நீரின் ஆழம் அதிகரிக்கும் வேகம் என்ன?
தலை கீழாக வைக்கப்பட்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வடிவில் உள்ள ஒரு நீர்நிலைத் தொட்டியின் ஆழம் 12 மீட்டர் மற்றும் மேலுள்ள வட்டத்தின் ஆரம் 5 மீட்டர் என்க . நிமிடத்திற்கு 10 கன மீட்டர் வேகத்தில் நீர் பாய்ச்சப்படுகிறது எனில், 8 மீட்டர் ஆழத்தில் நீர் இருக்கும் போது நீரின் ஆழம் அதிகரிக்கும் வேகம் என்ன?
17 மீட்டர் நீளமுள்ள ஒரு ஏணி செங்குத்தான சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது ஏணியின் அடிப்பக்கம் சுவற்றிலிருந்து விலகிச் செல்லும் வீதம் வினாடிக்கு 5 மீட்டர் எனில் ஏணியின் அடிப்பக்கம் சுவற்றிலிருந்து 8 மீட்டர் தொலைவில் இருக்கும் போது, எந்த வீதத்தில், ஏணி, சுவர் மற்றும் தரை ஆகியவற்றால் உருவாகும் முக்கோணத்தின் பரப்பளவு மாறுகிறது?
வடதிசையிலிருந்து ஒரு செங்கோண சந்திப்பை அனுகும் ஒரு காவல்துறை வாகனம் வேகமாகச் சென்று திரும்பி கிழக்கு நோக்கிச் செல்லும் ஒரு மகிழுந்தை துரத்துகிறது. சாலை சந்திப்பின் வடக்கே 0.6 கி.மீ தொலைவில் காவல்துறையின் வாகனமும் கிழக்கே 0.8 கி.மீ தொலைவில் மகிழுந்தும் உள்ள பொழுது, மின்காந்த அலைக் கருவியின் துணைகொண்டு காவல்துறை தங்களது வாகனத்திற்கும் மகிழுந்துக்கும் இடைப்பட்ட தூரம் மணிக்கு 20 கி.மீ வீதத்தில் அதிகரிக்கிறது எனத் தீர்மானிக்கின்றனர். காவல்துறை வாகனம் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் நகர்கிறது எனில் மகிழுந்தின் வேகம் என்ன?
கொடுக்கப்பட்ட புள்ளிகளில் பின்வரும் வளைவரைகளுக்கும் தொடு கோட்டின் சாய்வினைக் காண்க. `y=x^4+2x^2-x, x=1`
கொடுக்கப்பட்ட புள்ளிகளில் பின்வரும் வளைவரைகளுக்கும் தொடு கோட்டின் சாய்வினைக் காண்க. `x=acos^3t, y=bsin^3t, t=frac{pi}{2}`
`y=x^2-5x+4` என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு 3x+y=7 என்ற கோட்டிற்கு இணையாக இருக்கும்?
`y=x^3-6x^2+x+3` என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு x+y=1729 என்ற கோட்டிற்கு செங்குத்தாக இருக்கும்?
`y^2-4xy=x^2+5` என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு கிடைமட்டமாக இருக்கும்?
கீழ்க்கண்ட வளை வரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. `y=x^2-x^4, (1,0)`
கீழ்க்கண்ட வளை வரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. `y=x^4+2e^x ,(0,2)`
கீழ்க்கண்ட வளை வரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. `y=xsinx ,(frac{pi}{2}, frac{pi}{2})`
கீழ்க்கண்ட வளை வரைகளின் மீது கொடுக்கப்பட்ட புள்ளிகளில் தொடுகோடு மற்றும் செங்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க. `x=cost, y=2sin^2t, t=frac{pi}{3}`
`y=1+x^3` என்ற வளைவரைக்கு x + 12y = 12 என்ற கோட்டிற்கு செங்குத்தாக உள்ள தொடு கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
`y=frac{x+1}{x-1}` என்ற வளைவரைக்கு x + 2y = 6 என்ற கோட்டிற்கு இணையாக உள்ள தொடு கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
`x=7 cost` மற்றும் `y=2sint, tinRR` என்ற வளைவரைக்கு ஏதேனும் ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகளைக் காண்க.
xy=2 என்ற செவ்வக அதிபரவளையத்திற்கும் `x^2+4y=0` என்ற பரவளையத்திற்கும் இடைப்பட்ட கோணத்திளைக் காண்க.
`x^2-y^2=r^2` மற்றும் `xy=c^2` என்ற வளைவரைகள் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் எனக்காட்டுக. இங்கு c,r ஆகியவை மாறிலிகள்.
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தோற்றம் ஏன் பயன்படுத்த என்பதை விளக்குக. `f(x)=|frac{1}{x}|, x in[-1,1]`
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தோற்றம் ஏன் பயன்படுத்த என்பதை விளக்குக. `f(x)=tanx, x in[0, pi]`
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தோற்றம் ஏன் பயன்படுத்த என்பதை விளக்குக. `f(x)=x-2 logx, x in [2,7]`
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x-ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x-அச்சிற்கு இணையாக இருக்கும்? `f(x)=x^2-x, x in [0,1]`
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x-ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x-அச்சிற்கு இணையாக இருக்கும்? `f(x)=frac{x^2-2x}{x+2}, x in [-1,6]`
ரோலின் தேற்றத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் சார்புகளுக்கு x-ன் எம்மதிப்புகளில் வரையப்படும் தொடுகோடு x-அச்சிற்கு இணையாக இருக்கும்? `f(x)=sqrtx-frac{x}{3}, x in [0,1]`
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக. `f(x)=frac{x+1}{x}, x in [-1,2]`
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக. f(x)=|3x+1|, xbelongs[-1,3]
கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக. `f(x)=|3x+1|, x in [-1,3]`
லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியின் முனைப் புள்ளிகள் வழியே செல்லும் நாணுக்கு இணையாக ஒரு தொடுகோட்டின் தொடும் புள்ளியின் x-ன் மதிப்பைக் காண்க . `f(x)=x^3-3x+2, x in [-2,2]`
லெக்ராஞ்சியின் சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளியின் முனைப் புள்ளிகள் வழியே செல்லும் நாணுக்கு இணையாக ஒரு தொடுகோட்டின் தொடும் புள்ளியின் x-ன் மதிப்பைக் காண்க. `f(x)=(x-2)(x-7), x in [3,11]`
`f(x)=frac{1}{x}` என்ற சார்பிற்கு [a, b] -யை மிகை முழு எண்களாக கொண்ட மூடிய இடைவெளி [a, b] -ல் சராசரி மதிப்புத் தேற்றத்தின்படி இறுதி மதிப்பு `sqrt(ab)` என நிறுவுக.
`f(x)=Ax^2+Bx+C` என்ற சார்பிற்கு எந்த ஒரு மூடிய இடைவெளி [a,b] -ல் சராசரி மதிப்புத் தேற்றத்தின்படி இறுதி மதிப்பு `frac{a+b}{2}` என நிறுவுக.
ஒரு பந்தய மகிழுந்து ஓட்டுநர் 20-ஆம் கிலோமீட்டரில் இருந்து புறப்படுகிறார் . அதன். வேகம் எப்பொழுதும் 150 கி.மீ/மணி-யை தாண்டவில்லை எனில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரால் கடக்க முடிந்த அதிகபட்ச வேகம் காண்க.
f(x) சார்பானது, `f'(x)le1, 1lexle4` எனில், `f(4)-f(1)le3` எனக்காட்டுக.
f(x) என்ற வகையிடத்தக்க சார்பானது `f(0)=-1, f(2)=4`மற்றும் `f'(x)le2∀x` என்றவாறு இருக்க முடியுமா? எனது பதிலுக்கு தகுந்த விளக்கம் தருக.
`f(x)=x(x+3)e^-frac{pi}{2}, -3lexle0` என்ற வளைவரைக்கு x-அச்சிற்கு இணையாக வரையப்படும் தொடுகோட்டின் தொடும் புள்ளியின் x-மதிப்பு (-3, 0) என்ற இடைவெளியில் அமையும் அமையும் என நிறுவுக.
`f(x)=frac{1}{x}` என்ற சார்பிற்கு [a, b] -யை மிகை முழு எண்களாக கொண்ட மூடிய இடைவெளி [a, b] -ல் சராசரி மதிப்புத் தேற்றத்தின்படி இறுதி மதிப்பு `sqrt(ab)` என நிறுவுக.
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : `e^x`
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : sinx
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : cosx
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : `log(1-x), -1lex<1`
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : `tan^-1(x), -1lexle1`
கீழ்க்காணும் சார்புகளுக்கு மெக்லாரனின் விரிவைக் காண்க : `cos^2x`
`logx, x>0` என்ற சார்பின் டெய்லர் தொடரின் விரிவை x= 1 - ஐ பொருத்து முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
sinx -ன் விரிவை `x-frac{pi}{4}` -ன் அடுக்குகளாக முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
`f(x)=x^2-3x+2` என்ற பல்லுறுப்புக் கோவையின் வரிசை x-1 -ன் அடுக்குகளாக காண்க.
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarr0^+)x^x`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarroo)frac{2x^2-3}{x^2-5x+3}`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarroo)frac{x}{logx}`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarrfrac{pi^-}{2}){secx}-{tanx}`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarroo)e^-xsqrtx`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarr0)(frac{1}{sinx}-frac{1}{x})`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarr1^+)(frac{2}{x^2-1}-frac{x}{x-1})`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarr0^+)x^x`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarroo)(1+frac{1}{x})^x`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarrfrac{pi}{2})(sinx)^tanx`
கீழ்க்கானும் எல்லைகளை, தேவைப்படும் இடங்களில் லோபிதாலின் விதியை பயன்படுத்தி காண்க. `lim_(xrarr0+)(cosx)^(x^(frac{1}{2})`
`A_0` எனும் ஆரம்பத் தொகையானது, ஒரு வருடத்திற்கு n முறை r என்ற வட்டி வீதத்தில் கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்படுகிறது எனில், முதலீடு செய்யப்பட்டு t வருடத்தில் அந்தத் தொகையின் மதிப்பு `A=A_0(1+frac{r}{n})^(nt)`வட்டியானது தொடர்ச்சியான முறையில் (அதாவது `n rarroo`), கணக்கிடப்பட்டால், t காலத்திற்குப் பின்னர் அந்தத் தொகையின் மதிப்பு `A=A_0e^(rt)` எனக் காட்டுக.
கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க . `f(x)=x^2-12x+10, [1,2]`
கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க . `f(x)=3x^4-4x^3, [-1,2]`
கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க . `f(x)=6x^(frac{4}{3})-3x^(frac{1}{3}) , [-1,1]`
கீழ்க்காணும் சார்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் மீப்பெரு மற்றும் மீச்சிறு அறுதி மதிப்புகளை காண்க `f(x)=2cosx+sin2x , [0, frac{pi}{2}`
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளை காண்க : `f(x)=2x^3+3x^2-12x`
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளை காண்க : `f(x)=frac{x}{x-5}`
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளை காண்க : `f(x)=frac{e^x}{1-e^x}`
கீழ்க்காணும் சார்புகளுக்கு ஓரியல்பு இடைவெளிகளைக் கணக்கிட்டு அதிலிருந்து இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளை காண்க : `f(x)=frac{x^3}{3}-logx`
கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றுப் புள்ளிகளைக் காண்க: `f(x)=x(x-4)^3`
கீழ்க்காணும் சார்புகளுக்கு குழிவு இடைவெளிகள் மற்றும் வளைவு மாற்றுப் புள்ளிகளைக் காண்க: `f(x)=frac{1}{2}(e^x-e^-x)`
இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி அறுதி மதிப்புகளைக் காண்க. `f(x)=-3x^5+5x^3`
கொடுக்கப்பட்ட சுற்றளவுள்ள செவ்வாங்களுள், சதுரம் மட்டுமே பெரும் பரப்பைக் கொண்டிருக்கும் என நிறுவுக.
r செ.மீ ஆரமுள்ள அறை வட்டத்தினுள் அமைக்கப்படும் செவ்வகங்களும் மீப்பெர செவ்வகத்தின் பரிமாணங்களைக் காண்க?
ஒரு உற்பத்தியாளர் ஒரு சதுர அடித்தளத்தையும் 108 சதுர செ.மீ வெளிப்புறப்பரப்பையும் கொண்ட திறந்த பெட்டியை வடிவமைக்க விரும்புகிறார். அதிகபட்ச கன அளவிற்கான பெட்டியின் பரிமாணங்களைக் காண்க
ஒரு உருளையின் கன அளவு `V=pir^2h` மேலும் r+h=6 எனில் கன அளவின் மீப்பெரு மற்றும் மீச்சிறு மதிப்புகளைக் காண்க.
ஆரம் a செ.மீ. மற்றும் உயரம் b செ.மீ கொண்ட ஒரு வெற்றுக் கூம்பு ஒரு மேசையின் மீது வைக்கப்படுகிறது. இதன் அடியில் மறைத்து வைக்கக் கூடிய மிகப்பெரிய உருளையின் கன அளவு கூம்பின் கன அளவைப் போல் `frac{4}{9}` மடங்கு என்பதைக் காட்டுக.
கீழ்க்காகும் வளைவரைகளுக்கு தொலைத் தொடுகோடுகளைக் காண்க : `f(x)=frac{x^2}{x^2-1}`
கீழ்க்காகும் வளைவரைகளுக்கு தொலைத் தொடுகோடுகளைக் காண்க : `f(x)=frac{x^2}{x^2+1}`
கீழ்க்காகும் வளைவரைகளுக்கு தொலைத் தொடுகோடுகளைக் காண்க : `f(x)=frac{x^2-6x-1}{x+3}`
கீழ்க்காகும் வளைவரைகளுக்கு தொலைத் தொடுகோடுகளைக் காண்க : `f(x)=frac{x^2+6x-4}{3x-6}`
கீழ்காணும் சார்புகளை வரைக : `y=xsqrt(4-x)`
கீழ்காணும் சார்புகளை வரைக : `y=frac{x^2+1}{x^2-4}`
கீழ்காணும் சார்புகளை வரைக : `y=frac{1}{1+e^(-x)`
கீழ்காணும் சார்புகளை வரைக : `y=frac{x^3}{24}-logx`
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு `3pi` செ.மீ`.^3`விதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் `frac{1}{2}` செ.மீ ஆக இருக்கும் போது ஆரத்தின் மாறுபட்டு வீதம்
ஒரு பலூனானது செங்குத்தாக மேல் நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடமிருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும் போது காண்க.
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை `s(t)=3t^2-2t-8` எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
ஒரு கல்லானது செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் `x=80t-16t^2`. கல் அதிகபட்ச உயரத்தைவினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது
`6y=x^3+2` என்ற வளைவரையின் எப்புள்ளியில் y-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் x-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்.
`f(x)=sqrt(8-2x)` என்ற வளைவரையின் எந்த x - ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடு கோட்டின் சாய்வு -0.25 இருக்கும்?
f(x)=2cos4x என்ற வளைவரைக்கு `x=frac{pi}{12}` -ல் செங்கோட்டின் சாய்வு
`y^2-xy+9=0` என்ற வளைவரையின் தொடு கோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
EXERCISE questions and complete solutions for chapter வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் of SURA MATHS (TAMIL) of Class 12