Class 11 | CHEMISTRY |
Chapter | தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு |
SURA PUBLICATION(TAMIL) | Exercise |
Number Of Questions | 58 |
Academic Year | 2023-24 |
அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும் ?
A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே `1s^2,2s^2, 2p^6, 3s^2` மற்றும் `1s^2,2s^2, 2p^6, 3s^2, 3p^5` ஆகும். இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு.
வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான், (differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.
பின்வரும் வாய்ப்புகளில் , கொடுக்கப்பட்ட வரிசைகளுக்கு அவற்றிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள பண்பினைய் பொருத்து சரியாக அமைந்திருக்காத வரிசை இடம்பெற்றுள்ள வாய்ப்பு எது?
பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
மூன்றாம் வரிசையினுடைய முதல் அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
தவறான கூற்றை கண்டறிக
பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?
9, 17, 35, மற்றும் 53 ஆகியவற்றை முறையே அணு எண்களாக பெற்றுள்ள தனிமங்களான F, Cl, Br மற்றும் I ஆகியவற்றின் எதிர் குறியுடன் கூடிய எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளின் வரிசை
பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம் .
4,8,7 மற்றும் 12 ஐ முறையே அணு எண்ணாக பெற்ற தனிமங்கள் X, Y, Z மற்றும் A ஆகியவைகளின் எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்புகள் குறையும் சரியான வரிசை
கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது. காரணம் : கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு
பின்வரும் தனிமங்களுள் இரண்டாவதாக அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
Mg-ன் `IE_1` மற்றும் `IE_2` முறையே 179 மற்றும் 348 kcal `mol^(-1)` ஆகும். `Mg rarr Mg^(2+) + 2e^-` என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்
கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை
பின்வரும் வரிசைகளுள் அயனி ஆரங்களின் சரியான வரிசை எது?
Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ `mol^(-1)` ஆகும். Al-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்.
வரிசையில் இடமிருந்து வலமாகவும் , தொகுதியில் மேலிருந்து கீழாகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும் போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?
பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு
ஃப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ப்ளுரின்,
பின்வரும் மும்மை தொகுதிகளில் வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.
`CI^-` அயனியின் கடைசி எலக்ட்ரானின் Z செயலுறு மதிப்பு.
பின்வருவனவற்றுள் அணுவின் எலக்ட்ரான் நாட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
குறித்த இடைவெளிகளில் குறிப்பிட்ட பண்புகள் திரும்ப அமைவது
வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான் மீதான அணுக்கருவின் ஈர்ப்புவிசை குறைவதே மறைத்தல் விளைவு எனப்படுகிறது. திரைவிளைவு அதிகரிக்கும் போது அயனியாக்கும் ஆற்றல்.
பின்வரும் தனிமங்களை கவனி: Li, Na, K, Cs இவற்றின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
பின்வரும் எலக்ட்ரான் அமைப்புகளை கவனி I. `d^8 s^2` II. `d^9 s^1` III. `d^10 s^2` IV. `s^2p^2` இவற்றுள் எது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு பூஜ்ஜியத்தைக் கொண்ட அமைப்பு
பின்வருவனவற்றை கவனி I திரை விளைவு II அணுக்கரு சுமை இவற்றுள் அணு ஆரம் எதைப் பொருத்து அமைகிறது?
ஆற்றல் மட்டங்கள் அதிகரிப்பின் விளைவு
பின்வருவனவற்றுள் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பினால் ஏற்படும் விளைவு
பின்வருவனவற்றுள் எலக்ட்ரான் நாட்டம் ஒரு
லவாய்சியர் _________ தனிமங்கள் கொண்ட முதல் வேதி தனிமங்களின் பட்டியலினை ___________ல் வெளியிட்டார்.
பின்வரும் IE மதிப்பு ஒப்பீட்டை கவனி I Mg > Na II F > O III Be > Li IV F > Ne இவற்றுள் தவறான ஒப்பீடு எது?
பின்வருவனவற்றை கவனி I அணு ஆரம் II அயனி ஆரம் III எலக்ட்ரான் கவர்தன்மை IV எலக்ட்ரான் நாட்டம் இவற்றுள் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?
கூற்று (A): F ஐவிட Cl-ன் எலக்ட்ரான் நாட்டமதிப்பு அதிகம் காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை
ஆக்டினைடு தனிமங்கள் லாந்தனைடு தனிமங்களின் பண்புகளுடன் ஒத்துப் போகின்றன என்பதை சோதனை மூலம் நிரூபித்துக் காட்டியவர்
லவாய்சியர் பொருட்களை தனிமங்களின் ___________ வகை தொகுப்புகளாக வகைப்படுத்தினார்.
பின்வருவனவற்றுள் உலோக தனிமங்களில் இருந்த மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு
மூன்று தனிமங்கள் கொண்ட ஒரு குழுவாக தனிமங்களை வகைப்படுத்தியவர்
பொருட்களின் பண்புகள் அவற்றின் எண்களின் பண்புகளோடு தொடர்புடையது என்று கூறியவர்
"தனிமங்களை அவற்றின் அணு நிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கும் போது, ஒவ்வொரு எட்டாவது தனிமத்தினுடைய பண்பும், முதலாவது தனிமத்தின் பண்புடன் ஒத்திருந்தது" என முன்மொழிந்தவர்
1868-ல் தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்வணையினை ஒத்த ஒரு தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர்.
ஆவர்த்தன விதியின் அடிப்படையில் முதன் முதலில் ஆவர்த்தன அட்டவணையினை கட்டமைத்தவர்
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று (A): தனிமங்களை குறிப்பிட்ட இடத்தில் அமைத்தல் என்பது அதன் வெளிக் கூட்டு எலக்ட்ரான் அமைப்போடு நெருங்கிய தொடர்பு கெண்டது. காரணம் (R): நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படையில் நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் 7-விரிசைகளிலும் 18 தொகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். II) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு iv) (A) சரி (R) ஆனால் தவறு
"தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" என்று கூறியவர்
தொகுதி-13 முதல் 18 வரையிலான தனிமங்கள் அழைக்கப்படுவது
சகப்பிணைப்புச் சேர்மங்கள் மற்றும் ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களை உருவாக்கும் தன்மையை பெற்றுள்ள தனிமங்கள்
அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு _______________ ஆய்வின் மூலம் கண்டறியப்படுகிறது.
சகப்பிணைப்பு ஆரம் என்பது
ஒரு வரிசையில் செல்லும் போது அணு ஆரம்
ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக அணு ஆரம்
ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல்
எலக்ட்ரான் கவர்தன்மை என்பது
மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு
Exercise questions and complete solutions for chapter தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு of SURA CHEMISTRY (TAMIL) of Class 11