Class 11 | MATHS |
Chapter | நிகழ்தகவு கோட்பாடு ஓர் அறிமுகம் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 96 |
Academic Year | 2023-24 |
பின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = 0.15, P(B) = 0.30 , P(C) = 0.43, P(D) = 0.12
பின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = 0.22, P(B) = 0.38 , P(C) = 0.16, P(D) = 0.34
பின்வரும் ஒன்றையொன்று விளக்கிய A, B, C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாத்தியமானவையா எனத் தீர்மானிக்கவும். P(A) = `2/5`, P(B) = `3/5` , P(C) = -`1/5`, P(D) = `1/5`
இரண்டு நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. ஒரு தலை மற்றும் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
இரண்டு நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. அதிகபட்சமாக இரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு பெட்டியில் 5 மாம்பழங்களும் 4 ஆப்பிள் பழங்களும் உள்ளன. சமவாய்ப்பு முறையில் இரண்டு பழங்கள் எடுக்கப்பட்டால் ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆப்பிள் பழமும் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு பெட்டியில் 5 மாம்பழங்களும் 4 ஆப்பிள் பழங்களும் உள்ளன. சமவாய்ப்பு முறையில் இரண்டு பழங்கள் எடுக்கப்பட்டால் இரண்டும் ஒரே வகையைச் சார்ந்ததாகவும் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு சாதாரண வருடத்தில் 53 ஞாயிற்றுக் கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக் கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவைக் காண்க.
எட்டு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. சரியாக இரண்டு பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
எட்டு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. குறைந்தது இரண்டு பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
எட்டு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. அதிகபட்சமாக இரண்டு பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
முதல் 100 மிகை முழுக்களிலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது ஒரு பகா எண் அல்லது 8-இன் மடங்காக இருக்க நிகழ்தகவு யாது?
ஒரு பையில் 7 சிகப்பு மற்றும் 4 கருப்பு நிறப் பந்துகளும் உள்ளன. 3 பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்பட்டால், எல்லாப் பந்துகளும் சிகப்பு நிறப் பந்துகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு பையில் 7 சிகப்பு மற்றும் 4 கருப்பு நிறப் பந்துகளும் உள்ளன. 3 பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்பட்டால், ஒரு சிகப்பு மற்றும் இரண்டு கருப்பு நிறப் பந்துகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
52 சீட்டுகளைக் கொண்ட ஒரு கட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு ஒரு Ace அல்லது King கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
52 சீட்டுகளைக் கொண்ட ஒரு கட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு 6 அல்லது அதற்கும் குறைவான எண் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
52 சீட்டுகளைக் கொண்ட ஒரு கட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு queen அல்லது 9 கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு நிகழ்ச்சி A நிகழ சாதக விகிதம் 5க்கு 7 எனில் P(A)-ஐ காண்க.
P(B) = `2/5` எனில் நிகழ்ச்சி B நிகழ சாதக விகிதத்தைக் காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(bar A)` காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(AuuB)` காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(barA nn B)` காண்க.
A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும், P(A) = `3/8`, P(B) = `1/8` எனில் `P(bar A uu bar B)` காண்க.
A மற்றும் B என்பன ஒரு சமவாய்ப்புச் சோதனையின் நிகழ்ச்சிகள் மற்றும் P(A) = 0.35, P(A அல்லது B) = 0.85, மற்றும் P(A மற்றும் B) = 0.15 எனில், P(B மட்டும்) காண்க.
A மற்றும் B என்பன ஒரு சமவாய்ப்புச் சோதனையின் நிகழ்ச்சிகள் மற்றும் P(A) = 0.35, P(A அல்லது B) = 0.85, மற்றும் P(A மற்றும் B) = 0.15 எனில்,`P(bar B)` காண்க.
A மற்றும் B என்பன ஒரு சமவாய்ப்புச் சோதனையின் நிகழ்ச்சிகள் மற்றும் P(A) = 0.35, P(A அல்லது B) = 0.85, மற்றும் P(A மற்றும் B) = 0.15 எனில், P(A மட்டும்) காண்க.
ஒரு பகடை இரு முறை உருட்டப்படுகிறது. முதல் முறை வீசுவதில் 5 விழுவது நிகழ்ச்சி A எனவும் இரண்டாவது முறை வீசுவதில் 5 விழுவது நிகழ்ச்சி B எனக் கொண்டால் `P(A uu B)` ஐ காண்க.
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0,5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3 மற்றும் A-யும் B-யும் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவைக் காண்க. `P(A uu B)`
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0,5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3 மற்றும் A-யும் B-யும் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவைக் காண்க. `P(A nn bar B)`
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0,5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3 மற்றும் A-யும் B-யும் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவைக் காண்க. `P(bar A nn B)`
ஓரு நகரத்தில் இரு தீயணைக்கும் வண்டிகள் தனித்தனியாகச் செயல்படும் வகையில் உள்ளன. ஒவ்வொரு தீயணைக்கும் வண்டி கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.96. தேவையான பொழுது தீயணைக்கும் வண்டி கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
ஓரு நகரத்தில் இரு தீயணைக்கும் வண்டிகள் தனித்தனியாகச் செயல்படும் வகையில் உள்ளன. ஒவ்வொரு தீயணைக்கும் வண்டி கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.96. தேவையான பொழுது ஓரு தீயணைக்கும் வண்டியும் கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
ஒரு தொடர்வண்டி செல்லும் புதிய பாலத்தின் அமைப்பிற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.48, நேர்த்தியான முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.36, மற்றும் மேற்கண்ட இரு விருதுகளையும் பெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில் குறைந்தது ஒரு விருதாவது கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
ஒரு தொடர்வண்டி செல்லும் புதிய பாலத்தின் அமைப்பிற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.48, நேர்த்தியான முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.36, மற்றும் மேற்கண்ட இரு விருதுகளையும் பெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில் ஒரே ஒரு விருது மட்டும் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
இரு நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சார்பிலா நிகழ்ச்சிகளாக இருக்க இயலுமா?
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு `P(A uu B)` = 0.7, `P(A nn B)` = 0.2 மற்றும் P(B) = 0.5 எனில், A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.
A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் `P(A uu B)` = 0.6, P(A) = 0.2 எனில், P(B) காண்க.
P(A) = 0.5, P(B) = 0.8 மற்றும் P(B/A) = 0.8 எனில், P(A/B) மற்றும் `P(A uu B)` காண்க.
A, B என்ற நிகழ்ச்சிகளுக்கு P(A) = `3/4`, P(B) = `2/5` மற்றும் `A uu B` = S (கூறுவெளி) எனில் சார்புநிலை நிகழ்தகவு காண்க.
கணிதவியலில் ஒரு வினாவானது மூன்று மாணவர்களிடம் தீர்வு காண்பதற்காக கொடுக்கப்படுகிறது. அவர்கள் தனித்தனியே தீர்ப்பதற்கான நிகழ்தகவு `1/3`, `1/4` மற்றும் `1/5`. அந்த வினா தீர்வு கண்டதற்கான நிகழ்தகவு யாது?
கணிதவியலில் ஒரு வினாவானது மூன்று மாணவர்களிடம் தீர்வு காண்பதற்காக கொடுக்கப்படுகிறது. அவர்கள் தனித்தனியே தீர்ப்பதற்கான நிகழ்தகவு `1/3`, `1/4` மற்றும் `1/5`. சரியாக ஒருவர் மட்டுமே அந்த வினாவிற்குத் தீர்வு காண்பதற்கான நிகழ்தகவு யாது?
பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு மகிழ்வுந்துக்கு எண்ணெய் மாற்ற நிகழ்தகவு 0.30, எண்ணெய் வடிப்பான் மாற்ற நிகழ்தகவு 0.4, எண்ணெய் மற்றும் எண்ணெய் வடிப்பான் இரண்டையும் மாற்ற நிகழ்தகவு 0.15. எண்ணெய் மாற்றப்பட வேண்டும் என்றால் ஒரு புதிய எண்ணெய் வடிப்பான் தேவைப்படுவதற்கான நிகழ்தகவு என்ன?
பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு மகிழ்வுந்துக்கு எண்ணெய் மாற்ற நிகழ்தகவு 0.30, எண்ணெய் வடிப்பான் மாற்ற நிகழ்தகவு 0.4, எண்ணெய் மற்றும் எண்ணெய் வடிப்பான் இரண்டையும் மாற்ற நிகழ்தகவு 0.15. புதிய எண்ணெய் வடிப்பான் தேவைப்பட்டால் எண்ணெய் மாற்றப்பட வேண்டியதற்கான நிகழ்தகவு என்ன?
ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. ஒவ்வொரு பையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில் இரண்டும் வெள்ளை நிறப்பந்துகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. ஒவ்வொரு பையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில் இரண்டும் கருப்பு நிறப்பந்துகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. ஒவ்வொரு கையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில் ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
ஒரு வகுப்பில் `2/3` பங்கு மாணவர்களும் மீதம் மாணவியர்களும் உள்ளனர். ஒரு மாணவி முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.85 மற்றும் மாணவர் முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.70. சமவாய்ப்பு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் முதல் தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நிகழ்தகவு யாது?
P(A) = 0.4 மற்றும் `P(A uu B)` = 0.7 எனில் P(B)ஐ கீழ்க்காணும் நிபந்தனைக்கு உட்பட்டுக் காண்க. A மற்றும் B ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள்
P(A) = 0.4 மற்றும் `P(A uu B)` = 0.7 எனில் P(B)ஐ கீழ்க்காணும் நிபந்தனைக்கு உட்பட்டுக் காண்க. A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள்
P(A) = 0.4 மற்றும் `P(A uu B)` = 0.7 எனில் P(B)ஐ கீழ்க்காணும் நிபந்தனைக்கு உட்பட்டுக் காண்க. P(A/B) = 0.4
P(A) = 0.4 மற்றும் `P(A uu B)` = 0.7 எனில் P(B)ஐ கீழ்க்காணும் நிபந்தனைக்கு உட்பட்டுக் காண்க. P(B/A) = 0.5
சமவாய்ப்பு முறையில் ஒரு வருடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது 53 ஞாயிற்றுகளைக் கொண்டதாக இருப்பதன் நிகழ்தகவு யாது?
சமவாய்ப்பு முறையில் ஒரு வருடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது 53 ஞாயிற்றுகளைக் கொண்ட ஒரு லீப் வருடமாக கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
ஒரு இலக்கை குறிபார்த்து சுடும்போது 4 ல் 3 முறை X-ம், 5 இல் 4 முறை Y-ம், 3-ல் 2 முறை Z-ம் சரியாக இலக்கைச் சுடுகின்றனர். மூவரும் அந்த இலக்கைச் சுடும்போது சரியாக இருவர் மட்டுமே சுடுவதற்கான நிகழ்தகவு யாது?
ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்கள் I மற்றும் II என இருவகை உள்ளன. இயந்திரம்-I தொழிற்சாலையின் உற்பத்தியில் 60% தயாரிக்கிறது மற்றும் இயந்திரம்-II உற்பத்தியில் 40% தயாரிக்கிறது. மேலும் இயந்திரம்-I-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 2% குறைபாடுள்ளதாகவும் இயந்திரம்-II-ன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் 4% குறைபாடுள்ளதாகவும் இருக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்பொருள் குறைபாடுடன் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
ஒத்த இரு ஜாடிகளில் ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது. அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒத்த இரு ஜாடிகளில் ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது. அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு பைப் தயாரிக்கும் நிறுவனம் X, Y மற்றும் Z என்ற மூன்று தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது. X, Y மற்றும் Z களின் தினந்தோறும் உற்பத்தி செய்யும் பைப்களின் அளவுகள் முறையே 2000 அலகுகள், 3000 அலகுகள் மற்றும் 5000 அலகுகள் ஆகும். முந்தைய திறனைப் பொறுத்து X, Y மற்றும் Z தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பைப்களின் குறைபாடுகள் முறையே 3%, 4% மற்றும் 2% ஆகும். சமவாய்ப்பு முறையில் ஒரு நாள் உற்பத்தியான பைப்களிலிருந்து ஒரு பைப் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
ஒரு பைப் தயாரிக்கும் நிறுவனம் X, Y மற்றும் Z என்ற மூன்று தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்கிறது. X, Y மற்றும் Z களின் தினந்தோறும் உற்பத்தி செய்யும் பைப்களின் அளவுகள் முறையே 2000 அலகுகள், 3000 அலகுகள் மற்றும் 5000 அலகுகள் ஆகும். முந்தைய திறனைப் பொறுத்து X, Y மற்றும் Z தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பைப்களின் குறைபாடுகள் முறையே 3%, 4% மற்றும் 2% ஆகும். சமவாய்ப்பு முறையில் ஒரு நாள் உற்பத்தியான பைப்களிலிருந்து ஒரு பைப் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பைப் குறைபாடுள்ளதாக இருப்பின் அது தொழிற்சாலை Y-யில் உற்பத்தியானதற்கான நிகழ்தகவு என்ன?
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். அலுவலக உணவகம் மேம்பட வேண்டும் எனில் B என்பவரை மேலாளராக நியமிப்பதற்கான நிகழ்தகவு என்ன?
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரதான நேரத்தில் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி ஆராய்ந்தபொழுது கடந்த காலப் பதிவுகளின்படி பிரதான நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் மனைவியர் 60 சதவீதத்தினர் ஆவர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் நேரத்தில் 40% கணவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணாத நேரங்களில் 30% கணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர் என்றால் பிரதான நேரத்தில் கணவர் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு காண்க.
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரதான நேரத்தில் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி ஆராய்ந்தபொழுது கடந்த காலப் பதிவுகளின்படி பிரதான நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் மனைவியர் 60 சதவீதத்தினர் ஆவர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் நேரத்தில் 40% கணவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர். மனைவியர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணாத நேரங்களில் 30% கணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர் என்றால் கணவர் தொலைக்காட்சி காணும் நேரங்களில் மனைவியும் தொலைக்காட்சி காணும் நிகழ்தகவு காண்க.
மூன்று ஆண்கள், இரு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குழுவிலிருந்து சமவாய்ப்பு முறையில் நான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சரியாக இருவர் மட்டும் குழந்தைகளாக இருப்பதற்கான நிகழ்தகவு.
{1, 2, 3, ...., 20} என்ற கணத்திலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் 3 அல்லது 4 ஆல் வகுபடுவதற்கான நிகழ்தகவு
A, B மற்றும் C தனித்தனியாக ஒரே சமயத்தில் ஒரு இலக்கை நோக்கிச் சுடுகின்றனர். அவர்கள் அந்த இலக்கைச் சுடுவதற்கான நிகழ்தகவுகள் முறையே `3/4, 1/2, 5/8` எனில் A அல்லது B அந்த இலக்கைச் சரியாகச் சுடவும் ஆனால் அந்த இலக்கை C சரியாகச் சுடாமல் இருப்பதற்கான நிகழ்தகவானது
A மற்றும் B என்பன இரு நிகழ்ச்சிகள் எனில் சரியாக ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கான நிகழ்தகவானது
A மற்றும் B இரு நிகழ்ச்சிகளுக்கு `P( bar(A uu B))` = 1/6,` P(A nn B) = 1/4` மற்றும் `P(bar A) = 1/4` எனில் நிகழ்ச்சிகள் A-யும் B-யும்
நான்கு குறைபாடுள்ள பொருள்களைக் கொண்ட மொத்தம் 12 பொருள்களிலிருந்து இரு பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் குறைந்தது ஓரு பொருள் குறைபாடு உடையதாக இருப்பதற்கான நிகழ்தகவானது
ஒரு நபரின் கைப்பையில் 3 ஐம்பது ரூபாய் நோட்டுகளும் 4 நூறு ரூபாய் நோட்டுகளும் மற்றும் 6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் உள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்படும் இரு நோட்டுகளும் நூறு ரூபாய் நோட்டுகளாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவின் சாதக விகிதமானது?
ASSISTANT' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எழுத்தும் 'STATISTICS' என்ற சொல்லிலிருந்து சமவாய்ப்ப்பில் ஒரு எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது அவ்விரு எழுத்துக்களும் ஒரே எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவானது
வரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு.
ஒரு பயில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. பையிலிருந்து தொடர்ச்சியாக 5 பந்துகளை மீண்டும் வைக்கப்படாமல் எடுக்கும் போது பந்துக்களில் நிறம் மாறி மாறிக் கிடைப்பதற்கான நிகழ்தகவானது
A மற்றும் B ஆகிய இரு நிகழ்ச்சிகள் `A sub B` மற்றும் `P(B) != 0` என இருப்பின் பின்வருவனவற்றுள் எது மெய்யானது?
ஒரு பயில் 6 பச்சை, 2 வெள்ளை மற்றும் 7 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. இரு பந்துகள் ஒரே சமயத்தில் எடுக்கும்போது அவை வெவ்வேறு நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவானது
X மற்றும் Y என்ற நிகழ்ச்சிகளுக்கு P(X/Y) = `1/2`, P(Y/X) = `1/3`, `P(X nn Y) = 1/6` எனில் `P(X uu Y)`-ன் மதிப்பு
ஒரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 5 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. ஜாடியிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகிறது. அதனையும் அதன் நிறமுள்ள மேலும் இரு பந்துகளும் ஜாடியில் மீண்டும் வைக்கப்படுகின்றன. பின்னர் ஜாடியிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படும் போது அது சிவப்பு நிறப்பந்தாக இருப்பதற்கான நிகழ்தகவானது
ஒன்று முதல் நூறு வரையிலுள்ள இயல் எண்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எண் x தேர்ந்தெடுக்கப்படுகிறது. `((x - 10) (x - 50))/(x - 30) ge 0` என்பதனைப் பூர்த்தி செய்யும் எண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி A எனில், P(A) ஆனது
A, B என்ற சார்பிலா நிகழ்ச்சிகளுக்கு P(A) = 0.35 மற்றும் `P(A uu B)` = 0.6 எனில், P(B) ஆனது
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு `P(bar A) = 3/10` மற்றும் `P(A nn bar B) = 1/2` எனில், `P(A nn B)`-ன் மதிப்பு
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு `P(bar A) = 3/10` மற்றும் `P(A nn bar B) = 1/2` எனில், `P(A nn B)`-ன் மதிப்பு
A, B மற்றும் C என்ற மூன்று நிகழ்ச்சிகளில் ஒன்று மட்டுமே நிகழக்கூடும். A-க்கு சாதகமற்ற விகிதம் 7க்கு 4 மற்றும் Bக்கு சாதகமற்ற விகிதம் 5க்கு 3 எனில் Cக்குச் சாதகமற்ற விகிதம்
a மற்றும் bன் மதிப்புகள் {1, 2, 3, 4} என்ற கணத்தில் திரும்ப வரும் என்ற வகையில் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் `x^2 + ax + b = 0` என்ற சமன்பாட்டின் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(A) = `1/4`, P(A/B) = `1/2` மற்றும் P(B/A) = `2/3` எனில், P(B)-ன் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் 4% மாணவர்கள் மற்றும் 1% மாணவியர்கள் 1.8 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளனர். மேலும் கல்லூரியில் மொத்த எண்ணிக்கையில் 60% மாணவியர்கள் உள்ளனர். சமவாய்ப்பு முறையில் 1.8 மீ உயரத்திற்கு மேல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் மாணவியாக இருப்பதற்கான நிகழ்தகவு
பத்து நாணயங்களைச் சுண்டும்போது குறைந்தது 8 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்வு
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கான நிகழ்தகவு முறையே 0.3 மற்றும் 0.6 ஆகும். A மற்றும் B ஒரே சமயத்தில் நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.18 எனில் A அல்லது B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
ஒரு எண் m ஆனது `mle5`, எனில் இருப்படிச் சமன்பாடு `2x^2 + 2mx + m + 1 = 0`-ன் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு
கூற்று (A): ஒரு பகடையை உருட்டும் போது 7 என்ற எண் கிடைக்கிறது காரணம் (R): பகடையில் 1, 2, 3, 4, 5, 6 ஆகிய எண்கள் மட்டுமே இருக்கும்
பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க.
பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க.
1.தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
கூற்று (A): `nP_r > nC_r` காரணம் (R): `nP_r = nC_r` * r!
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
கூற்று (A): f(x) = `{(x,+,1,x<2),(2x,-,1,xge2):}` எனில் `f`(2) ஆனது வரையறுக்கப்படவில்லை. காரணம் (R): f(x) ஆனது 2-ல் தொடர்ச்சி அற்றது.
கூற்று (A): A மற்றும் B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் எனில் அவை சார்பிலா நிகழ்ச்சிகளாக இருக்க முடியாது. . காரணம் (R): `P(A nn B) = 0 != P(A) P(B)`
EXERCISE questions and complete solutions for chapter நிகழ்தகவு கோட்பாடு ஓர் அறிமுகம் of SURA MATHS (TAMIL) of Class 11