Class 12 | MATHS |
Chapter | சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 73 |
Academic Year | 2023-24 |
பின்வரும் இயற்பியல் கூற்றுகள் ஒவ்வொன்றையும், வகைக்கெழுச் சமன்பாடாக எழுதுக. (i) ரேடியம் சிதைவுறும் வீதமானது காணப்படும் அளவு Q-க்கு நேர்விகிதத்தில் இருக்கும். (ii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை P ஆனது, மக்கள் தொகை மற்றும் 5,00,000-க்கும் மக்கள் தொகைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை பெருக்கிக் கிடைக்கும் மதிப்புக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது. (iii) ஒரு பொருளின் வெப்பநிலை Tஐப் பொருத்து ஆவி அழுத்தம் P-ன் மாறுவீதமானது, ஆவி அழுத்தத்திற்கு நேர்விகிதத்திலும், வெப்பநிலையின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்திலும் உள்ளது.(iv) ஒரு சேமிப்பு தொகைக்கு ஒரு வருடத்திற்கு 8% வட்டித் தொகையானது தொடர்ச்சியாக அசலுடன் சேர்க்கப்படுகிறது. மேலும், மற்றொரு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வரவு ₹400 இத்தொகையுடன் தொடர்ச்சியாக சேர்க்கப்படுகிறது.
ஒரு கோள வடிவ மழைத்துளியானது அதன் வளைபரப்பின் மாறுவீதத்திற்கு நேர்விகிதத்தில் ஆவியாகிறது. மழைத்துளியின் ஆரத்தின் மாறுவீதத்தை உள்ளடக்கிய வகைக்கெழுச் சமன்பாட்டை உருவாக்குக
ஒரு தளத்தில் (i) நேர்க்குத்து அல்லாத நேர்கோடுகள் (ii) கிடைமட்டம் அல்லாத நேர்கோடுகள் ஆகிய தொகுப்புகளின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
`x^2+y^2=r^2` எனும் வட்டத்தைத் தொடும் எல்லா நேர்கோடுகளின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
ஆதிப்புள்ளி வழியாகச் செல்லும்,மையத்தினை x- அச்சின் மீது கொண்ட எல்லா வட்டங்களின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
செவ்வகலம் 4a மற்றும் x -அச்சின் இணையான அச்சுகளைக் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
முனை (0,1) மற்றும் y -அச்சை அச்சாகவும் கொண்ட பரவளையக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
ஆதிப்புள்ளியை மையமாகவும் செல்லும், y -அச்சின் மீது குவியங்களையும் கொண்ட நீள்வட்டத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
`y = Ae^8x + Be^(-8x)` எனும் சமன்பாட்டைக் கொண்ட வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டை காண்க. இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள்.
`xy=ae^x+be^(-x)+x^2` எனும் சமன்பாட்டால் குறிப்பிடப்படும் வளை வரையின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க
பின்வரும் சமன்பாடுகள் ஒவ்வொன்றும் அவற்றிற்கெதிரே கொடுக்கப்பட்டுள்ள வகைக் கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக. (i) `y=2x^2,xy'=2y` (ii) `y=a^(ex)+be^(-x), y-y=0`
ஏதேனும் ஒரு புள்ளியில் ஒரு வளைவரையின் தொடுகோட்டின் சாய்வு, அப்புள்ளியின் y அச்சுத் தொலைவின் 4 மடங்கின் தலை கீழியாகும்.மேலும் வளைவரை (2,5) எனும் புள்ளி வழியாகச் செல்கிறது எனில்,வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.
`y=e^(-x)+mx+n` என்பது `e^x((d^2y)/dx^2)-1=0` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக் காட்டுக.
`y = ax + b/x, x !=0` என்பது `x^2y'' + xy' - y = 0` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக் காட்டுக.
`y=ae^(-3x)+b` என்பது `(d^2y)/dx^2+3dy/dx=0` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக் காட்டுக. இங்கு a,b ஏதேனும் இரு எதேச்சை மாறிலிகள்.
`y^2=2a(x+a^(2/3))` எனும் வளைவரைத் தொகுதியைத் குறிக்கும் வகைக்கெழுச் சமன்பாடு `(y^2-2xydy/dx)^3=8(ydy/dx)^5` எனக் காட்டுக. இங்கு a என்பது மிகை மதிப்புடைய துணையலகாகும்.
`y=acosbx` என்பது `(d^2y)/dx^2+b^2y=0` னும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக் காட்டுக.
நிறை M உடைய ஒரு தானியங்கி இயந்திரத்தின் இயக்கியால் உருவாக்கப்படும் மாறாத விசை F எனில், அதனுடைய திசைவேகம் V என்பது `M(dV)/dt=F-kV` எனும் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது. k என்பது மாறிலியாகும். t=0 எனில் V =0 எனக் கொடுக்கப்படும்போது V ஐ t-ன் சார்பாக எழுதுக
செங்குத்தாக விழும் வான்குடை மிதவை(Parachute) ன் திசைவேகம் v ஆனது `vdy/dx=g(1-v^2/k^2)` எனும் சமன்பாட்டை நிறைவு செய்கிறது. இங்கு g மற்றும் k என்பன மாறிலிகள் ஆகும். ஆரம்ப நிலையில் v மற்றும் x ஆகிய இரண்டும் பூச்சியமானால் , v-ஐ x -ன் சார்பாக எழுதுக.
ஒரு வளைவரையின் சாய்வு `(y - 1)/(x^2 + x)` ஆகும். வளைவரை (1,0) எனும் புள்ளி வழிச் செல்லுமெனில், அதன் சமன்பாட்டைக் காண்க.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `[x + y cos(y/x)] dx = x cos(y/x) dy`
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(x^3+y^3)dy-x^2ydx=0`
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `ye^(x/y)dx=(xe^(x/y)+y)dy`
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க.`2xydx+(x^2+2y^2)dy=0`
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க.`xdy/dx=y-xcos^2(y/x)`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `cosxdy/dx+ysinx=1`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(1-x^2)dy/dx-xy=1`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `dy/dx+y/x=sinx`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(x^2+1)dy/dx+2xy=sqrt(x^2+4)`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(2x-10y^3)dy+ydx=0`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `xsinxdy/dx+(xcosx+sinx)y=sinx`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(y-e^(sin^(-1)x))dx/dy+sqrt(1-x^2)=0`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `dy/dx+y/((1-x)sqrtx)=1-sqrtx`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(1+x+xy^2)dy/dx+(y+y^3)=0`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `dy/dx+y/(xlogx)=(sin2x)/logx`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `(x+a)dy/dx-2y=(x+a)^4`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `dy/dx=sin^2x/(1+x^3)-(3x^2)/(1+x^3)y`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `xdy/dx+y=xlogx`
பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க. `xdy/dx+2y-x^2logx=0`
`dy/dx+(3y)/x=1/x^2`, கொடுக்கப்பட்டது y=2 எனில் x=1
நுண்ணுயிர்களின் பெருக்கத்தில், பாக்டீரியாக்களின் எண்ணிக்கையின் பெருக்க வீதமானது அதில் காணப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையின் விகிதமாக உள்ளது. இப்பெருக்கத்தால் பாக்டீரியாவின் எண்ணிக்கை மும்மடங்காகிறது எனில், 10 மணிநேர முடிவில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
ஒரு நகரத்தில் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் t நேரத்தில் உள்ள மக்கள் தொகையின் விகிதமாக அமைத்துள்ளது. மேலும் நகரத்தின் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 3,00,000லிருந்து 4,00,000 ஆக அதிகரித்துள்ளது எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் t நேரத்தில் அந்நகரத்தின் மக்கள் தொகையைக் காண்க.
மின்தடை மற்றும் தன் மின்தூண்டல் கொண்ட ஒரு மின்சுற்றின் மின் இயக்குவிசையின் சமன்பாடு `E=RiL(di)/(dt)` ஆகும். இங்கு E என்பது மின்சுற்றுக்கு கொடுக்கப்படும் மின் இயக்கு விசை, R என்பது மின்தடை மற்றும் L என்பது தன் மின்தூண்டல் எண் ஆகும். E=0 எனும்போது t நேரத்தில் , மின்சாரம் iஐக் காண்க.
வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் இயங்கும் ஒரு மின்விசைப் படகின் இயந்திரம் நிறுத்தப்படுகிறது. அதன் பின்னர் ஏதேனும் ஒரு நேரத்தில் (இயந்திரம் நிறுத்தப்பட்ட பிறகு) மின் விசைப் படகின் வேகம் குறையும் வீதமானது அந்நேரத்தில் அதன் திசைவேகத்திற்கு சமமாக உள்ளது எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இயந்திரம் நிறுத்தப்பட்ட 2 வினாடிகளுக்குப் பிறகு விசைப்படகின் திசைவேகம் காண்க.
வருடத்திற்கு 5% தொடர் கூட்டு வீதத்தில் ஒருவர் ரூபாய் 10,000-த்தை வங்கிக் கணக்கில் முதலீடு செய்கிறார். 18 மாதங்களுக்குப் பின்னர் அவர் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கும்?
ஒரு மாதிரியில் காணப்படும் கதிரியக்க அணுக்கருக்கள் சிதைவுறும் வீதமானது அந்நேரத்தில் அந்த மாதிரியில் காணப்படும் அணுக்கருக்களின் எண்ணிக்கைக்கு விகிதமாக அமைந்துள்ளது. 100 ஆண்டுகால இடைவெளியில் ஒரு மாதிரியில் ஆரம்பத்தில் காணப்படும் கதிரியக்க அணுக்கருக்களின் எண்ணிக்கையில் 10 சிதைவுறுகிறது. 1000 ஆண்டுகள் முடிவில் ஆரம்பத்தில் காணப்படும் கதிரியக்க அணுக்கருக்களின் எண்ணிக்கையில் எவ்வளவு மீதமிருக்கும் ?
வெப்பநிலை `25^@C`-ஆக உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள நீரின் வெப்பநிலை `100^@C` ஆகும். 10 நிமிடங்களில் நீரின் வெப்பநிலை `80^@C`-ஆகக் குறைந்து விடுகிறது. எனில் (i) 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை (ii) வெப்பநிலை `40^@C`-ஆக இருக்கும்போது நேரம் காண்க. `[log_e((11)/15)=-0.3101, log_e5=1.6094]`
ஒரு பாத்திரத்தில் `100^@C` வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரானது t=0 எனும் நேரத்தில் அடுப்பின் மீது இருந்து இறக்கி குளிர்வதற்காக சமையலறையில் வைக்கப்படுகிறது. 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை `80^@C` ஆகக் குறைகிறது. மேலும், அடுத்த 5 நிமிடங்களுக்குப் பிறகு நீரின் வெப்பநிலை `65^@C` ஆகக் குறைகிறது எனில், சமையலறையின் வெப்பநிலையைக் காண்க.
ஆரம்பத்தில் ஒரு தொட்டியில் 50 லிட்டர் தூய்மையான தண்ணீர் உள்ளது. தொடக்க நேரம் t=0-ல் ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் வீதம் கரைக்கப்பட்ட உப்புக் கரைசலானது ஒரு நிமிடத்திற்கு 3 லிட்டர் வீதம் தொட்டியில் விடப்படுகிறது. இக்கலவையானது தொடர்ந்து கலக்கப்பட்டு சீராக வைக்கப்படுகிறது. மேலும், அதே நேரத்தில் நன்கு கலக்கப்பட்ட இக்கலவையானது அதே வீதத்தில் தொட்டியிலிருந்து வெளியேறுகிறது. t=0 எனும் ஏதேனும் ஒரு நேரத்தில் தொட்டியில் உள்ள உப்பின் அளவினைக் காண்க.
`(d^2y)/dx^2+(dy/dx)^(1/3)+x^(1/4)` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே
`y=Acos(x+B)`, இங்கு A,B என்பன எதேச்சை மாறிலிகள் எனும் சமன்பாட்டைக் கொண்ட வளைவரை குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாடு
`sqrtsinx(dx+dy)=sqrtcosx(dx-dy)` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி
மையம் (h,k) மற்றும் ஆரம் 'a' கொண்ட எல்லா வட்டங்களின் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை
`y=Ae^x+Be^(-x)` இங்கு A,B என்பன ஏதேனும் ஈர மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு
`(dy)/dx=y/x` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத்தீர்வு
`2x(dy)/dx-y=3` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு குறிப்பிடுவது
`dy/dx+p(x)y=0` ன் தீர்வு
`dy/dx+y=(1+y)/lamda` என்ற வகைக்கெழு சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி
`dy/dx+P(x)y=Q(x)` என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி x எனில், P(x) என்பது
`y(x)=1+dy/dx+1/1.2(dy/dx)^2+1/(1.2.3)+....` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் படி
`dy/dx+1/sqrt(1-x^2)=0` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
`dy/dx=2xy` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
`log(dy/dx)=x+y` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
`dy/dx=2^(y-x)` ன் தீர்வு
`dy/dx=y/x+(Phi(y/x))/(Phi'(y/x))` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு
`dy/dx+Py=Q`, எனும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி sinx எனில், P என்பது
வரிசை n மற்றும் n +1 கொண்ட வகைக்கெழுச் சமன்பாடுகளின் பொதுத் தீர்வுகளில் உள்ள மாறத்தக்க மாறிலிகளின் எண்ணிக்கை முறையே
மூன்றாம் வரிசை வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்டத் தீர்வில் உள்ள மாறத்தக்க மாறிலியின் எண்ணிக்கை
`dy/dx=(x+y+1)/(x+1)` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி
ஏதேனும் ஒரு வருடம் t-ல் உள்ள P-ன் பெருக்க வீதமானது மக்கள் தொகைக்கு விகிதமாக அமையும் எனில், பின்னர்
t எனும் நேரத்திற்குப் பிறகு மீதமுள்ள ஒரு பொருளின் அளவு P ஆகும். பொருள் ஆவியாகும் வீதமானது அந்நேரத்தில் மீதமிருக்கும் பொருளின் அளவிற்கு விகிதமாக அமைந்துள்ளது எனில், பின்னர்
`dy/dx=(ax+3)/(2y+f)` எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு ஒரு வட்டத்தைக் குறிக்குமானால், a-ன் மதிப்பு
y=f(x) எனும் வளைவரையின் ஏதேனும் ஒரு புள்ளியிடத்து சாய்வு `dy/dx=3x^2` எனக் கொடுக்கப்படுள்ளது. மேலும் வளைவரையானது (-1,1) புள்ளி வழியாகச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாடு
EXERCISE questions and complete solutions for chapter சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் of SURA MATHS (TAMIL) of Class 12