Class 9 | MATHS |
Chapter | வடிவியல் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 57 |
Academic Year | 2023-24 |
படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.
ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1: 2 : 3, எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவைக் காண்க.
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும் ?
கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும் ?
`/_\ABC` மற்றும் `/_\DEF` இல் AB = DF, மற்றும் `/_ACB = 70^@`, `/_ABC = 60^@`, `/_DEF = 70^@` மற்றும் `EDF = 60^@`, எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.
ஒரு நாற்கரத்தின் கோணங்களின் விகிதம் 2 : 4: 5: 7 எனில், எல்லாக் கோண அளவுகளையும் காண்க.
செவ்வகம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது Oவில் வெட்டிக் கொள்கின்றன. மேலும் `/_OAB = 46^@` எனில் `/_OBC` காண்க.
படத்தில் AB = 2, BC = 6, AE = 6, BF = 8, CE = 7 மற்றும் CF = 7, எனில், நாற்கரம் ABDE இன் பரப்பு மற்றும் `/_\CDF` இன் பரப்பிற்கும் உள்ள விகிதம் காண்க.
வட்டத்தின் விட்டம் 52 செ.மீ மற்றும் ஒரு நாணின் நீளம் 20 செ.மீ எனில், மையத்திலிருந்து நாணிற்கு உள்ள தூரம் காண்க.
வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ தொலைவில் 30 செ.மீ நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.
ஆரம் `4sqrt2` செ.மீ உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் ACஇன் நீளம் காண்க. மேலும், `/_OAC` மற்றும் `/_OCA` காண்க.
ஆரம் 15 செ.மீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 12 செ.மீ தொலைவில் அமைந்துள்ள நாணின் நீளம் காண்க.
Oஐ மையமாக உடைய வட்டத்தில் AB மற்றும் CD என்பன இரு இணையான நாண்கள் ஆகும். மேலும் ஆரம் 10 செமீ, AB = 16 செமீ மற்றும் CD = 12 செமீ எனில், இரு நாண்களுக்கு இடைப்படைப்பட்ட தொலைவைத் தீர்மானிக்க.
5 செமீ மற்றும் 3 செமீ ஆரமுள்ள இரு வட்டங்கள், இரண்டு புள்ளிகளில் வெட்டிக் கொள்கின்றன. மேலும், அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4 செமீ எனில், பொது நாணின் நீளத்தைக் காண்க.
பின்வரும் படங்களில் `x^@` இன் மதிப்பைக் காண்க.
கொடுக்கப்பட்ட படத்தில் `x^@`-இன் மதிப்பு காண்க.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O-வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் AC. இங்கு, `/_ADE = 30^@`, `/_DAC = 35^@` `/_CAB = 40^@` எனில், `/_ACD` காண்க.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O-வை மையமாகக் கொண்ட வட்டத்தின் விட்டம் AC. இங்கு, `/_ADE = 30^@`, `/_DAC = 35^@` `/_CAB = 40^@` எனில், `/_ACB` காண்க.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள வட்ட நாற்கரம் ABCD-இன் அனைத்துக் கோணங்களையும் காண்க.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்ட நாற்கரம் ABCD இன் விட்டங்கள் வெட்டும் புள்ளி P மேலும் `/_DBC = 40^@` மற்றும் `/_BAC = 60^@` எனில், `/_CAD` காண்க.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்ட நாற்கரம் ABCD இன் விட்டங்கள் வெட்டும் புள்ளி P மேலும் `/_DBC = 40^@` மற்றும் `/_BAC = 60^@` எனில், `/_BCD` காண்க.
படத்தில் AB மற்றும் CD ஆனது Oவை மையமாகக் கொண்ட வட்டத்தின் இரு இணையான நாண்கள். மேலும், AB = 8 செ.மீ, CD = 6 செ.மீ, `OM _|_ AB, OL _|_ CD` இடைப்பட்ட தூரம் LM ஆனது 7 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம் காண்க?
பாலத்தின் வளைவின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு வளைவின் அகலம் 6 மீ மற்றும் வளைவின் அதிகளவு உயரம் 2 மீ எனில், வளைவை உள்ளடக்கிய வட்டத்தின் ஆரம் என்ன?
படத்தில் `/_ABC = 120^@`, O-வை மையமாகக் கொண்ட வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகள் A, B மற்றும் C எனில் `/_OAC` காண்க.
கொடுக்கப்பட்ட படத்தில், `/_POQ = 100^@` மற்றும் `/_PQR = 30^@` எனில், `/_RPO` காண்க.
முக்கோணம் ABC யை வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க. இங்கு A இல் செங்கோணம், AB = 4 செ.மீ மற்றும் AC = 3 செ.மீ.
AB = 6 செ.மீ, `/_B = 110^@` மற்றும் AC = 9 செ.மீ அளவுகளுள்ள `/_\ABC` வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்க.
6.5 செ.மீ. பக்க அளவுகளைக் கொண்ட சமபக்க முக்கோணம் வரைக. அம்முக்கோணத்திற்குக் குத்துக்கோடு மையம் காண்க.
AB = 6 செ.மீ., `/_B = 110^@` மற்றும் BC = 5 செ.மீ. என்ற அளவுகளை உடைய `/_\ABC` வரைந்து அதன் குத்துக்கோடு மையம் காண்க.
PQ = 4.5 செ.மீ., QR = 6 செ.மீ. மற்றும் PR = 7.5 செ.மீ. என்ற அளவுகளை உடைய செங்கோண `/_\PQR` வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.
AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் `/_B = 70^@` அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.
4.5 செ.மீ. மற்றும் 6 செ.மீ. அளவுகளை செங்குத்துப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண `/_\PQR` வரைந்து சுற்று வட்ட மையம் காண்க மற்றும் சுற்று வட்டம் வரைக.
AB = 5 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் `/_B = 100^@` அளவுள்ள `/_\ABC` வரைந்து அதற்குச் சுற்று வட்டம் வரைக மற்றும் சுற்று வட்ட மையம் காண்க.
QR = 7 செ.மீ., `/_Q = 50^@` மற்றும் PQ = PR அளவுகள் கொண்ட இருசமபக்க `/_\PQR` வரைக. மேலும், `/_\PQR` இன் சுற்றுவட்ட மையம் வரைக.
கர்ணம் 10 செ.மீ, ஒருபக்க அளவு 8 செ.மீ உள்ள செங்கோண முக்கோணம் வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.
AB = 9 செ.மீ, `/_CAB = 115^@` மற்றும் `/_ABC = 40^@` என்ற அளவுகளுக்கு `/_\ABC` வரைக. மேலும் அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக. (குறிப்பு : மேற்கண்ட கணக்குகளிலிருந்து எந்தவொரு முக்கோணத்திற்கும் உள்வட்டமானது முக்கோணத்தின் உள்ளே அமைகிறது என்பதை நீங்கள் காணலாம்)
AB = BC = 6 செ.மீ, `/_B = 80^@` என்ற அளவுகளுக்கு `/_\ABC` வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.
முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் `/_BCD` இன் அளவு
சதுரம் ABCD இல் மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், O-வை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் `CE || DB` எனில், `x^@` இன் மதிப்பு
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
சாய் சதுரத்தின் மூலை விட்டங்கள் சமமெனில் அந்தச் சாய் சதுரம் ஒரு
நாற்கரம் ABCD இல் `/_A மற்றும் `/_B` இன் இரு சம வெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில், `/_AOB இன் மதிப்பு
ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் `90^@` எனில், அந்த இணைகரம் ஒரு
பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?
முக்கோணத்தின் கோணங்கள் `(3x - 40)^@`, `(x + 20)^@` மற்றும் `(2x - 10)^@` எனில் x இன் மதிப்பு
O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS மேலும் `/_POQ = 70^@` எனில், `/_ORS` = __________.
ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் ____________
படத்தில் வட்டமையம் O மற்றும் `/_ACB = 40^@` எனில், `/_AOB = ______________
வட்ட நாற்கரம் ABCD-யில் `/_A = 4x`, `/_C = 2x` எனில், x இன் மதிப்பு
படத்தில் வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன. மேலும், CE = ED = 8 செ.மீ மற்றும் EB = 4 செ.மீ எனில், வட்டத்தின் ஆரம்
படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் `/_QRS = 100^@`, எனில், `/_TVS` =
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு `75^@` எனில், எதிர் கோணத்தின் அளவு
படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு `/_ADC = 80^@` மற்றும் `/_ECF = 20^@`, எனில், BAD = ?
AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு, AD = 30 செ.மீ மற்றும் AB = 24 செ.மீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம்
படத்தில் OP = 17 செ.மீ PQ = 30 செ.மீ மற்றும் OS ஆனது PQ இக்குச் செங்குத்து எனில், RS-ன் மதிப்பு
EXERCISE questions and complete solutions for chapter வடிவியல் of SURA MATHS (TAMIL) of Class 9