Class 12 | MATHS |
Chapter | அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க: `[(-3, 4), (6, 2)]`
பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க: `[(2, 3, 1), (3, 4, 1), (3, 7, 2)]`
பின்வரும் அணிகளுக்குச் சேர்ப்பு அணி காண்க: `1/3 [(2, 2, 1), (-2, 1, 2), (1, -2, 2)]`
பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க: `[(-2, 4), (1, -3)]`
பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க: `[(5, 1, 1), (1, 5, 1), (1, 1, 5)]`
`F (alpha) = [(cos alpha, 0, sin alpha), (0, 1, 0), (-sin alpha, 0, cos alpha)]` எனில், `[F(alpha)]^(-1) = F(-alpha)` எனக்காட்டுக.
`A=[(5, 3), (-1, -2)]` எனில், `A^2 - 3A - 7I_2 = O_2` எனக் காட்டுக. இதன் மூலம் `A^(-1)` காண்க.
`A=1/9 [(-8, 1, 4), (4, 4, 7), (1, -8, 4)]` எனில், `A^-1 = A^T` நிறுவுக.
`A=[(8, -4), (-5, 3)]` எனில், `A(adj A) = (adj A) A = |A| I_2` என்பதைச் சரிபார்க்க.
`A=[(3, 2), (7, 5)]` மற்றும் `B = [(-1, -3), (5, 2)]` எனில், `(AB)^(-1) = B^-1 A^(-1)` என்பதைச் சரிபார்க்க.
`adj A = [(1, 0, 1), (0, 2, 0), (-1, 0, 1)]` எனில் adj (adj (A)) -ஐக் காண்க.
`A = [(1, tanx), (-tanx, 1)]`, எனில் `A^T A^(-1) = [(cos 2x, -sin2x), (sin2x cos2x)]` எனக்காட்டுக.
`A = [(5, 3), (-1, -2)] = [(14, 7), (7, 7)]` எனில் A -ஐக் காண்க.
`A = [(1, -1), (2, 0)], B = [(3, -2), (1, 1)], C = [(1, 1), (2, 2)]`, மற்றும் AXB = C எனில், X என்ற அணியைக் காண்க.
`A = [(0, 1, 1), (1, 0, 1), (1, 1, 0)]` எனில், `A^(-1) = 1/2 (A^2 - 3I)` எனக் காட்டுக.
`[(-1, -1), (2, 1)]` என்ற அணியை பிந்தையப் பெருக்கல் சங்கேத மொழியாக்க அணியாகக் கொண்டு [2 -3] [20 4] என்ற பெறப்பட்ட `[(-1, -1), (2, 1)]` -ன் நேர்மாறு அணியின் பிந்தையப் பெருக்கற் சாவியாகக் கொண்டு சங்கேத மொழி மாற்றம் செய்க. இங்கு ஆங்கில எழுத்துகள் A - Z -க்கு முறையே எண்கள் 1 - 26 ஐயும், காலியிடத்திற்கு எண் 0 ஐயும் பொருத்தி சங்கேத மொழியாக்கம் மற்றும் மொழிமாற்றம் செய்க.
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க: `[(2, -4), (-1, 2)]`
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க: `[(-1, 3), (4, -7), (3, -4)]`
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க: `[(1, -2, -1, 0), (3, -6, -3, 1)]`
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க: `[(1, -2, 3), (2, 4, -6), (5, 1, -1)]`
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க: `[(0, 1, 2, 1), (0, 2, 4, 3), (8, 1, 0, 2)]`
பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க : `[(1, 1, 1, 3), (2, -1, 3, 4), (5, -1, 7, 11)]`
பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க : `[(1, 2, -1), (3, -1, 2), (1, -2, 3), (1, -1, 1)]`
பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க : `[(3, -8, 5, 2), (2, -5, 1, 4), (-1, 2, 3, -2)]`
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க: `[(2, -1), (5, -2)]`
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க: `[(1, -1, 0), (1, 0, -1), (6, -2, -3)]`
பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க: `[(1, 2, 3), (2, 5, 3), (1, 0, 8)]`
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாமாறு அணி காணல் முறையில் தீர்க்க: 2x + 5y = -2, x + 2y = -3
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாமாறு அணி காணல் முறையில் தீர்க்க: 2x - y = 8, 3x + 2y = -2
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாமாறு அணி காணல் முறையில் தீர்க்க: 2x + 3y - z = 9, x + y + z = 9, 3x - y - z = -1
பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மாமாறு அணி காணல் முறையில் தீர்க்க: x + y + z - 2 = 0, 6x - 4y + 5z - 31 = 0, 5x + 2y + 2z = 13.
`A=[(-5, 1, 3), (7, 1, -5), (1, -1, 1)]` மற்றும் `B=[(1, 1, 2), (3, 2, 1), (2, 1, 3)]`, எனில் பெருக்கற்பலன் AB மற்றும் BA காண்க. இதன் மூலம் x + y + 2z = 1, 3x + 2y + z = 7, 2x + y + 3z = 2 என்ற நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாத ஊதியத்தில் பணியில் அமர்த்தப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான ஊதிய உயர்வு அவருக்கு வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் ஊதியம் ₹19,800 மற்றும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெறும் ஊதியம் ₹23,400 எனில் அவருடைய ஆரம்ப ஊதியம் மற்றும் ஆண்டு உயர்வு எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணி காணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)
4 ஆடவரும் 4 மகளிரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 2 ஆடவரும் 5 மகளிரும் சேர்ந்து 4 நாட்களில் முடிப்பார்கள். எனில் அவ்வேலையை ஓர் ஆடவர் மற்றும் ஒரு மகளிர் தனித்தனியாக செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களாகும் என்பதை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க.
A, B மற்றும் C எனற பொருட்களின் விலை ஓர் அலகிற்கு முறையே ₹ x, y, மற்றும் z ஆகும். P என்பவர் B-ல் 4 அலகுகள் வாங்கி, A-ல் 2 அலகையும் C-ல் 5 அலகையும் விற்கிறார். Q என்பவர் C-ல் 2 அலகுகள் வாங்கி A-ல் 3 அலகுகள் மற்றும் B-ல் 1 அலகையும் விற்கிறார். R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B-ல் 3 அலகையும் C அலகில் ஒரு அலகையும் விற்கிறார். இவ்வணிகத்தில் P, Q மற்றும் R முறையே ₹ 15,000, ₹ 1,000 மற்றும் ₹ 4,000 வருமானம் ஈட்டுகின்றனர் எனில் A, B மற்றும் C பொருட்களின் ஓரலகு விலை எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணி காணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)
பின்வரும் நேரியச் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க: 5x - 2y + 16 = 0, x + 3y - 7 = 0
பின்வரும் நேரியச் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க: `3/x + 2y = 12, 2/x + 3y = 13`
பின்வரும் நேரியச் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க: 3x + 3y - z = 11, 2x + y - 2z = 9, 4x + 3y + 2z = 25
பின்வரும் நேரியச் சமன்பாடுகள் தொகுப்பை கிராமரின் விதிப்படி தீர்க்க: `3/x - 4/y - 2/z -1 = 0, 1/x + 2/y + 1/z -2 = 0, 2/x - 5/y - 4/z + 1 = 0`
ஒரு போட்டித் தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும்`1/4` மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவர் 100 கேள்விகளுக்குப் பதிலளித்து 80 மதிப்பெண்கள் பெறுகிறார் எனில் அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாக பதில் அளித்திருப்பார்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி இக்கணக்கைத் தீர்க்கவும்).
வேதியாளர் ஒருவரிடம் 50% அமிலத்தன்மை கொண்ட ஒரு கரைசலும் மற்றும் 25% அமிலத்தன்மை கொண்ட மற்றொரு கரைசலும் உள்ளது. அவர் 10 லிட்டர் கரைசலில் 40% அமிலத்தன்மை உள்ளவாறு ஒரு கரைசலை உருவாக்க இருவகைக் கரைசல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எத்தனை லிட்டர் சேர்க்க வேக வேண்டும்? (இக்கணக்கை கிராமரின் விதியைப் பயன்படுத்தித் தீர்க்க).
ஒரு மீன் தொட்டியை பம்பு A மற்றும் பம்பு B என்பன ஒன்றாகச் சேர்ந்து 10 நிமிடங்களில் நீரை நிரப்பும். பம்பு B ஆனது நீரை உள்ளே அல்லது வெளியே ஒரே வேகத்தில் அனுப்ப இயலும். எதிர்பாராதவிதமாக பம்பு B ஆனது நீரை வெரை வெளியே அனுப்பினால் தொட்டி நிரம்ப 30 நிமிடங்கள் ஆகும் எனில் ஒவ்வொரு பம்பும் தொட்டியை தனித்தனியாக நிரப்ப எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்கவும்).
ஒரு குடும்பத்திலுள்ள மூன்று நபர்கள் இரவு உணவு சாப்பிட ஓர் உணவகத்திற்குச் சென்றனர். இரு தோசைகள், மூன்று இட்லிகள் மற்றும் இரு வடைகளின் விலை ₹150. இரு தோசைகள், இரு இட்லிகள் மற்றும் நான்கு வடைகளின் விலை ₹ 200. ஐந்து தோசைகள், நான்கு இட்லிகள் மற்றும் இரண்டு வடைகளின் விலை ₹ 250. அக்குடும்பத்தினரிடம் ₹ 350 இருந்தது மற்றும் அவர்கள் மூன்று தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் ஆறு வடைகள் சாப்பிட்டனர். அக்குடும்பத்தினர் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின் விதிக்கொண்டு நிரூபி)?
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் காஸ்ஸியன் நீக்கல் முறையில் தீர்க்கவும்: 2x -2y + 3z = 2, x + 2y - z = 3, 3x - y + 2z = 1.
பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் காஸ்ஸியன் நீக்கல் முறையில் தீர்க்கவும்: 2x + 4y + 6z = 22, 3x + 8y + 5z = 27, -x + y + 2z = 2
`ax^2 + bx + c ` ஐ[ x + 3] , [x - 5,] மற்றும்[ x - 1 ]-ஆல் வகுக்கும்போது மீதியானது முறையே 21, 61 மற்றும் 9 எனில் a, b மற்றும் c -ஐக் காண்க. (காஸ்ஸியன் நீக்கல் முறையை உபயோகிக்கவும்)
ஒரு தொகை ₹ 65,000 ஆண்டிற்கு முறையே 6%, 8% மற்றும் 9% என்ற வட்டி வீதத்தில் மூன்று பத்திரங்களில் செய்யப்படுகிறது. மொத்த ஆண்டு வருமானம் ₹ 4,800. மூன்றாவது பத்திரத்தில் கிடைக்கும் வருமானமானது இரண்டாவது பத்திரத்தில் கிடைக்கும் வருமானத்தை விட ₹ 600 அதிகம் எனில் ஒவ்வொரு பத்திரத்திலும் முதலீடு செய்யப்பட்ட தொகையைக் காண்க. (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக)
ஒரு சிறுவன் `y = ax^3 + bx + c` என்ற பாதையில் (-6, 8), (-2 - 12) மற்றும் (3, 8), எனும் புள்ளிகள் வழியாக செல்கிறான். P(7, 60) என்ற புள்ளியில் உள்ள அவனுடைய நண்பனை சந்திக்க விரும்புகிறான். அவன் அவனுடைய நண்பனை சந்திப்பானா? (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக).
பின்வரும் சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க. x - y + 2z = 2, 2x + y + 4z = 7, 4x - y + z = 4
பின்வரும் சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க. 3x + y + z = 2, x - 3y + 2z = 1, 7x - y + 4z = 5
பின்வரும் சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க. 2x + 2y + z = 5, x - y + z = 1, 3x + y + 2z = 4
பின்வரும் சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கமைவு உடையதா என்பதை ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க. 2x - y + z = 2, 6x - 3y + 3z = 6, 4x - 2y + 2z = 4.
k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx - 2y + z = 1, x-2ky + z = -2, x - 2y + kz = 1 ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க
k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx - 2y + z = 1, x-2ky + z = -2, x - 2y + kz = 1 எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க
காஸ் - ஜோர்டன் முறையை பயன்படுத்தி, `lambda, mu` -இன் எம்மதிப்புகளுக்கு `2x - 3y + 5z = 12, 3x + y + lambda z = mu, x - 7y + 8z = 17` எண்ணிக்கையற்ற தீர்வுகளை பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.
`lambda, mu` - இன் எம்மதிப்புகளுக்கு `2x + 3y + 5z = 9, 7x + 3y - 5z = 8, 2x + 3y + lamda z = mu`, என்ற சமன்பாடுகளின் தொகுப்பானது, யாதொரு தீர்வும் பெற்றிராது என்பதனை ஆராய்க.
`lambda, mu` - இன் எம்மதிப்புகளுக்கு `2x + 3y + 5z = 9, 7x + 3y - 5z = 8, 2x + 3y + lamda z = mu`, என்ற சமன்பாடுகளின் தொகுப்பானது, யாதொரு தீர்வும் பெற்றிராது என்பதனை ஆராய்க.
`lambda, mu` - இன் எம்மதிப்புகளுக்கு `2x + 3y + 5z = 9, 7x + 3y - 5z = 8, 2x + 3y + lamda z = mu`, என்ற சமன்பாடுகளின் தொகுப்பானது, யாதொரு தீர்வும் பெற்றிராது என்பதனை ஆராய்க.
பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும். 3x + 2y + 7z = 0, 4x - 3y - 2z = 0, 5x + 9y + 23z = 0
பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும். 2x + 3y - z = 0, x - y - 2z = 0, 3x + y + 3z = 0.
`lambda` - வின் எம்மதிப்பிற்கு `x + y + 3z = 0, 4x + 3y + lamda z = 0, 2x + y + 2z = 0` என்ற தொகுப்பிற்கு வெளிப்படைத் தீர்வு
`lambda` - வின் எம்மதிப்பிற்கு `x + y + 3z = 0, 4x + 3y + lamda z = 0, 2x + y + 2z = 0` என்ற தொகுப்பிற்கு வெளிப்படையற்ற தீர்வு கிடைக்கும்
காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி: `C_2 H_6 + O_2 rarr H_2O + CO_2` என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.
`[adj (adj A) | = |A|^9`, எனில், சதுர அணி A -யின் வரிசையானது
A என்ற `3 xx 3` பூச்சியற்றக் கோவை அணிக்கு `A A^T = A^T A` மற்றும் `B = A^-1 A^T`, என்றவாறு இருப்பின் `BB^T = `
`A = [(3, 5), (1, 2)]`, B = adj A மற்றும் C = 3A எனில், `(|adj B|)/(|C|) = `
`A [(1, -2), (1, 4)] = [(6, 0), (0, 6)]` எனில், A =
`A = [(7, 3), (4, 2)]` எனில், `9I_2 - A =`
`A = [(2, 0), (1, 5)]` மற்றும் `B = [(1, 4), (2, 0)]` எனில், |adj(AB)| =
`P = |(1, x, 0), (1, 3, 0), (2, 4, -2)|` என்பது `3 xx 3` வரிசையுடைய அணி A -ன் சேர்ப்பு அணி மற்றும் |A| = 4, எனில், x ஆனது
`A = [(3, 1, -1), (2, -2, 0), (1, 2, -1)]` மற்றும் `A^-1 = [(a_11, a_12, a_13), (a_21, a_22, a_23), (a_31, a_32, a_33)] எனில், `a_23` -ன் மதிப்பானது
A, B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?
`(AB)^-1 = [(12, -17), (-19, 27)]` மற்றும் `A^-1 = [(1, -1), (-2, 3)]` எனில, `B^-1`=
`A^T.A^-1` ஆனது சமச்சீர் எனில், `A^2 =`
A என்பது பூச்சியற்றக் கோவை அணி மற்றும் `A^-1 = [(5, 3), (-2, -1)]` எனில், `(A^T)^-1=`
`A = [(3/5, 4/5), (x, 3/5)]` மற்றும் `A^T = A^-1` எனில், x -ன் மதிப்பு
`A = [(1, tan, theta/2), (-tan, theta/2, 1)]` மற்றும் `AB = I_2` எனில் B =
`A = [(cos theta, sin theta), (-sin theta, cos theta)]` மற்றும் `A (adj A) = [(k, 0), (0, k)]` எனில், k =
`A = [(2, 3), (5, -2)]` மற்றும் `lambda A^-1 = A` எனில், `lambda` -ன் மதிப்பு
`adj A = [(2, 3), (4, -1)]` மற்றும் `adj B = [(1, -2), (-3, 1)]` எனில், adj (AB) ஆனது
`[1, 2, 3, 4), (2, 4, 6, 8), (-1, -2, -3, -4)]` -ன் அணித்தரம்
`x^a y^b = c^m, x^c, y^d = e^n, /_\_1 = [(m, b), (n, d)], /_\_2 = [(a, m), (c, n)], /_\_3 = |(a, b), (c, d)|` எனில் x மற்றும் y -ன் மதிப்புகள் முறையே,
பினவருபனவற்றுள் எவை / எவைகள் உண்மையானவை? (i) ஒரு சமச்சீர் அணியின் சேர்ப்பு அணி சமச்சீராக இருக்கும். (ii) ஒரு மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணி மூலை விட்ட அணியாக இருக்கும். (iii) A என்பது n வரிசையுடைய ஒரு சதுர அணி மற்றும் `lambda` என்பது ஒரு திசையிலி எனில் `adj (lambda A) = lambda^n adj (A)`. (iv) A (adj A) = (adj A) A = |A|I
`rho(A) = rho (|A|B|)` எனில், AX = B என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது
`0 le theta le pi` மற்றும் `x + (sintheta)y - (cos theta) z = 0, (cos theta) x - y + z = 0, (sin theta)x + y - z = 0` மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், `theta` -ன் மதிப்பு
ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணியானது `[(1, 2, 7, 3), (0, 1, 4, 6), (0, 0, lambda-7, mu+5)]` மற்றும் தொகுப்பானது எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும் எனில்,
`A = [(2, -1, 1), (-1, 2, -1), (1, -1, 2)]` மற்றும் `4B = [(3, 1, -1), (1, 3, x), (-1, 1, 3)]` என்க. A-ன் நேர்மாறு B எனில், x-ன் மதிப்பு
`A = [(3, -3, 4), (2, -3, 4), (0, -1, 1)]` எனில், adj (adj A) -ன் மதிப்பு
சமன்பாடுகள் தொகுப்பு x + y + z = 6, x + 2y + 3z = 14 மற்றும் `2x + 5y + lamda z = mu (lambda, mu in RR)` ஒருங்கமைவுடன் ஒரே தீர்வை கொண்டிருக்க வேண்டும் எனில்
x = cy + bz, y = az + cx மற்றும் z = bx + ay என்ற சமன்பாட்டு தொகுப்பு வெளிப்படையற்ற தீர்வை கொண்டிருக்கும் எனில் ___________
`P = |(1, x, 0), (1, 3, 0), (2, 4, -2)|` என்பது `3 xx 3` வரிசையுடைய அணி A -ன் சேர்ப்பு அணி மற்றும் |A| = 4, எனில், x ஆனது
`A^T` ஆனது சதுர அணி A யின் நிரை நிரல் மாற்று எனில்
2x + y = 4, x - 2y = 2, 3x + 5y = 6 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கான தீர்வுகளின் எண்ணிக்கை
`P = |(1, x, 0), (1, 3, 0), (2, 4, -2)|` என்பது `3 xx 3` வரிசையுடைய அணி A -ன் சேர்ப்பு அணி மற்றும் |A| = 4, எனில், x ஆனது
நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு x + y + z = 2, 2x + y - z = 3, 3x + 2y + kz = 4 க்கு ஒரே ஒரு தீர்வு இருக்குமெனில் _____________
A வரிசை n உடைய சதுர அணி எனில், |adj A| = ______________
சமன்பாடுகளின் தொகுப்பு x + 2y - 3z = 2, (k + 3) z = 3, (2k + 1) y + z = 2 ஒருங்கமைவு அற்றது எனில் k ஆனது
` A = ((cos x, sin x), (-sin x, cos x))` மற்றும் `A (adj A) = lambda ((1, 0), (0, 1)` எனில் `lambda` ஆனது
`A m xx n ` வரிசையுடைய அணி எனில் `rho(A)` ____________
x + 2y+ 3z = 1, x - y + 4z = 0, 2x + y + 7z = 1 என்ற தொகுப்பிற்கு ______________
EXERCISE questions and complete solutions for chapter அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் of SURA MATHS (TAMIL) of Class 12