Class 11 | BIOLOGY |
Chapter | திசு மற்றும் திசு தொகுப்பு |
SURA PUBLICATION(TAMIL) | OBJECTIVE |
Number Of Questions | 44 |
Academic Year | 2023-24 |
கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு (i) எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது (ii) எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது (iii) சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோசைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம் அமைந்துள்ளது (iv) மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது
ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்களை கட்டுபடுத்துவது எது ?
இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது. இலை நரம்பின் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?
இருவிதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒரருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால், இருவிதையிலை தாவரங்களில்
இருவிதையிலை தண்டிற்கும், ஒரு விதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
கீழ்கண்ட பண்புகளைக் கொண்ட செல்கள் எது? I உயிருள்ளவை || நீண்டது, பல கோணமுடையது. III செல்சுவரில் செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் பெக்டின் காணப்படுகிறது. IV தாங்குதிறன் கொண்டது. V இலையின் நடுநரம்பு மற்றும் தண்டின் புறத்தோலடித் தோலில் காணப்படுகிறது.
தாவரத்தின் தள ஆக்குத்திசுவிலிருந்து உருவாகுவது எது?
பக்க வேர்கள் எதிலிருந்து உருவாகிறது?
இருவிதையிலை தாவர தண்டில், வேரில் உள்ள அகத்தோலை ஒத்த அடுக்கு எது?
இருவிதையிலைத் தாவரத் தண்டின் முதன் நிலை மெடுல்லா கதிர்கள் எதன் நீட்சியாகும்?
எங்கு அடிப்படைத்திசுத் தொகுப்பு புறணி, அகத்தோல் பெரிசைக்கிள் மற்றும் பித் என வேறுபாடு அடைந்துள்ளது?
வாஸ்குலக் கற்றையில் இணைப்புத் திசு எவற்றிற்கு இடையில் காணப்படுகிறது?
சல்லடை குழாய்களின் பணிகள் ___________ செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உறக்க மையக் கொள்கைப்படி, வேரின் நுனியில் உறக்க மையம், வேர் மூடிக்கும் _______________ க்கும் இடையில் காணப்படுகிறது .
கோலங்கைமாவின் சுவரில் -------- படிந்திருப்பதால் கோண இடைவெளி, அடுத்த மற்றும் வளையக் கோலங்கைமா என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வாழை மற்றும் கல் வாழையின் இலைக் காம்புகளில் _________ பாரங்கைமா காணப்படுகிறது.
கிளைத்த பிரிவுகளைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் _____________ எனப்படும்.
ஒரு விதையிலைத் தாவர இலைகள் தட்பவெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப கருளுதலுக்கும், சுருள் நீங்குதலுக்கும் காரணமான செல்கள் - ________ எனப்படுகிறது.
வேர்த்துவிகள் _______லிருந்து தோன்றுகின்றன.
இருவிதையிலைத் தண்டின் புறத்தோலடித் தோலில் __________ காணப்படுவது
புறணியிலிருந்து சைலத்திற்கு தண்ணீர் கடத்தப்பட்ட பின்பு, மீண்டும் தண்ணீர் சைலத்திலிருந்து புறணிக்குச் செல்வதை தடுப்பது ழ__________
இருவிதையிலை தாவத்தில் வழிச் செல்கள் அமைந்துள்ள இடம் ___________
________ யூஸ்டில் காணப்படுகிறது.
இருவிதையிலை தாவர இலையைக் சூழ்ந்து காணப்படும் கற்றை உறை ____________ஆல் ஆனது.
கீழ்க்கண்டவற்றுள் "பாரங்கைமா செல்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி. (I) பாரங்கைமா செல்கள் உயிருள்ளவை (II) பாரங்கைமா செல்கள் உயிரற்றவை (III) பாரங்கைமா செல்கள், முட்டை, பலகோணம் வடிவமுடையது. (IV) பாரங்களா செல்கள் நீர்,காற்று, கழிவுப்பொருட்களை சேமிக்கின்றன.
கீழ்கண்டவற்றுள் "ஹிஸ்டோஜென் கொள்கை" பற்றிய சரியான கூற்றைக் கண்டறி (I) ஹிஸ்டோஜன் கொள்கையை உருவாக்கியவர் A. ஷ்மிட் (II) ஹிஸ்டோஜன் கொள்கையை உருவாக்கியவர் ஹேன்ஸ்டின். (III) ஹிஸ்டோஜன் கொள்கையை ஸ்டார்ஸ்பர்க்கர் ஆதரித்தார். (IV) வேர் நுனி ஆக்குத் திசுவில் நான்கு ஹிஸ்டோஜென்கள் இருப்பதாக இக் கொள்கை கூறுகிறது.
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) திசுக்களைப்பற்றிப் படித்தறியும் பிரிவு "திசுவமைப்பியல்". (II) ஒரு தாவரம் பல வகையான திசுக்களால் ஆனது. (III) C. நகேலி என்ற வல்லுநர் ஆக்குத்திசு என்ற பெயரைக் சூட்டினார். (lV) ஆக்குத்திசு செல்கள் ஒத்த விட்டம் கொண்ட முட்டை, உருண்டை அல்லது பல கோண வடிவச் செல்கள்.
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (I) மேக்ரோஸ்கிலிரைடுகள் சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். (II) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் மெல்லிய சுவர்கொண்ட மயிரிழைகள் போன்றவை ஆகும். (III) நீண்ட, கூர் முனைகளைக் கொண்ட ஸ்கிலிரங்கைமா ஸ்கிலிரைடுகள் ஆகும். (Iv) தேயிலை ஒரு பிரேக்கி ஸ்கிலிரைடுகள் ஆகும்.
கீழ்கண்டவற்றுள் "சைலக்குழாய்" பொருத்தவரையில் சரியான கூற்றைக் கண்டறி (I) சைலக்குழாய்கள், டிரக்கியா என்றும் அழைக்கப்படுகிறது. (II) இவை உயிருள்ள செல்களாகும். (Ill) ஒன்றன்மீது ஒன்றாக அமைத்துள்ள வரிசையான செல்கள் (Iv) இவற்றின் முனைச் கூவரில் திறவுகள் உள்ளன.
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி. (அ) இரண்டாம் நிலை சைலம் இடை ஆக்குத் திசுவிலிருந்து தோன்றுகிறது. (ஆ) முதன்நிலை சைவம் பக்க ஆக்குத் திசுவிலிருந்து தோன்றுகிறது. (இ) புரோட்டோஃபினோயம் இடை ஆக்குத் திசுவிலிருந்து தோன்றுகிறது. (ஈ) முதல் நிலை ஃபுளோயம் நுனி ஆக்குத்திசுவின் புரோகேம்பியத்திலிருந்து உருவாகிறது.
கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறி (அ) சைலக்குழாய்கள் ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரை கடத்துகிறது. (ஆ) டிரக்கியா ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரை கடத்துகிறது. (இ) சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உணவைக் கடத்துகிறது. (ஈ) ஃபுளோயம் பாரங்கைமா டெரிடோஃபைட்களில் காணப்படுகிறது.
கீழ்கண்டவற்றுள் "ஆக்குத்திசு" பொறித்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி (I) முதிர்ச்சியடைந்த திசுக்களுக்கிடையில் காணப்படும், கணுவிடைப் பகுதி நீட்சிக்குக் காரணமானது – இடையாக்குத் திசு. (Il) இரண்டாம் நிலை திசுக்கள் தோற்றம், தண்டு மற்றும் வேர் குறுக்களவு வளர்ச்சிக்கு காரணமானது - பக்க ஆக்குத்திசு. (III) புறத்தோல் மற்றும் வாஸ்குலத் திசுக்கள் தவிர மற்ற அனைத்து திசுக்களும் – தள ஆக்குத்திசுக்களாகும். (lV) சார்க் கேம்பியம் மற்றும் கற்றை இடைக்கேம்பியத்தை உருவாக்குவது – இரண்டாம் நிலை ஆக்குத்திசு
கீழ்கண்டவற்றுள் "இலை நீர்ச் சுரப்பிகள்" பொறித்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி (அ) இதனைச் சூழ்ந்து துணை செல்கள் காணப்படவில்லை. (ஆ) இவைகளின் துணைகள் எப்போதும் திறந்து காணப்படும். (இ) இலையின் அடிப்புறத்தில் அதிகமாகச் காணப்படும். (ஈ) இவை நீர் வடிதலில் ஈடுபடுகின்றன.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி (அ) அடுக்கு கோலங்கைமா செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும். (ஆ) வளையக் கோலங்கைமா அரளி தாவர இலைக்காம்பில் கண்டறிந்தார். (இ) டாட்டூரா நிக்கோட்டியானாவின் புறத்தோலடித்தோல் ஒரு கோண கோலங்கைமா வகை. (ஈ) ஐப்போமியாவின் புறத்தோலடித்தோல் இடைவெளி கோலங்கைமா வகை.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறி .(அ) வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம். (ஆ). சைலம் என்ற சொல்லை குசேன் அறிமுகப்படுத்தினார்.. (இ) புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும். சைலம் முதலாம் நிலை சைலம். (ஈ) வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம்.
சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று : புறணியில் வளிமப்பரிமாற்றம் எளிதாக நிகழ்கிறது. காரணம் : புறணி பரங்கைமா செல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த செல்கள் இடைவெளிகளுடன் நெருக்கமின்றி காணப்படுவதால் வளிமப்பரி மாற்றம் எளிதாக நிகழ்கிறது.
கீழ்க்கண்ட "ஹிஸ்டோஜென் கொள்கை" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A.,B, C மற்றும் D
பாகங்களுக்கு சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்க்கண்ட "அடுக்கு கோலங்கைமா" படத்தினில் குறிக்கப்பட்டுள்ள A
பாகத்திற்குரிய சரியான விடையை தேர்ந்தெடு.
கீழ்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்கண்டவற்றுள் சரியான இணையை கண்டறி.
கீழ்கண்டவற்றுள் " காப்பு செல்கள்" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்கண்டவற்றுள் "புளோயம்"" பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
கீழ்கண்டவற்றுள் " ஸ்கிலிரங்கைமா கனிகள் " பொருத்தவரையில் பொருந்தாத ஒன்றை கண்டறி.
OBJECTIVE questions and complete solutions for chapter திசு மற்றும் திசு தொகுப்பு of SURA BIOLOGY (TAMIL) of Class 11