Class 12 | CHEMISTRY |
Chapter | ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் |
SURA PUBLICATION(TAMIL) | EXERCISE |
Number Of Questions | 100 |
Academic Year | 2023-24 |
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத்தினைத் தருகிறது. 3.7g 'X' ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?
பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்?
ஈத்தீன் `overset(HOCl)(rarr)` A `overset(x)(rarr)` ஈத்தின் -1, 2 - டை ஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே
பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?
கார்பாலிக் அமிலம் என்பது
பின்வருவனவற்றுள் எச் சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது?
`(CH_(3))_(3) - C - CH (OH) CH_(3) overset(அடர் H_(2)SO_(4))(rarr) X` [முதன்மை விளைபொருள்]
கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட ௮திக அமிலத்தன்மை உடையது. காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
எத்தனால் `overset(PCl_(5))(rarr) X overset(alc.KOH)(rarr) Y underset (298K)overset(H_(2) SO_(4)// H_(2)O)(rarr) Z`. என்ற வினையில் 'Z' என்பது
நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.
கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக பினைத்திறன் மிக்கது. காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அருனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.
`HO CH_(2) CH_(2) - OH` ஐ பெர்அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது
தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது?
`C_(3) H_(8) O` என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Yஜ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?
பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான H1 உடன் வினைபடுத்தும் போது மெத்தில் ஆல்கஹால் உருவாகிறது?
வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதனை உருவாக்கும் வினை ஒரு
பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுன் வினைபுரிந்து தரும் நிறம்
கீழ்க்கண்டவற்றுள் உயர் கொதிநிலையுடையது எது?
நீரில் கரையும் தன்மையுடையது எது?
சோடியம் உலோகத்துடன் ஆல்கஹால் வினைபுரிவதின் வினை வீரிய வரிசை __________
எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை எதைவிடக் குறைவானது?
`CH_(3) MgI` தயாரிக்க ஆல்கஹாலைக் கரைப்பானாக பயன்படுத்த இயலாது ஏன்?
ஆல்கஹால் + தயோனைல் குளோரைடு `overset (பிரிடின்) (rarr)` ஆல்கைல் குளோரைடு உண்டாகும் வினையில் இடைநிலைச் சேர்மம் யாது?
ஓர் ஆல்கஹாலை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது இறுதியாக கிடைக்கும் அமிலத்தில் ஆல்கஹாலில் உள்ளதுபோல் கார்பன் அணுக்களின் எண்ணிக்கை உள்ளது. அந்த ஆல்கஹால் __________
அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படும் சேர்மம் ________
லூகாஸ் காரணியுடன் வேகமாக வினைபுரியும் சேர்மம் எது?
எத்தனாலைவிட பீனாலின் அயனியாக்கும் மாறிலி அதிகம். ஏனெனில். __________
கீழ்க்கண்ட சேர்மங்களில் எது வலிமையான அமிலம்?
p-நைட்ரோபீனாக்சைடு அயனியின் உடனிசைவு அமைப்பில் இல்லாத அமைப்பு ___________
பீனாலைவிட p-நைட்ரோபீனால், குறைந்த `pK_(a)` மதிப்புடையது ஏனெனில் ________
எதனுடன் லூகாஸ் காரணி வேகமாக வினைபுரிகிறது?
பீனாலை Zn-துகளுடன் காய்ச்சி வடிக்கும்போது ________ கிடைக்கிறது.
புரோமினேற்றத்திற்கு எளிதாக உட்படும் சேர்மம் _________
எத்திலின் கிளைக்கால் வெளிப்படுத்தும் மாற்றியம் __________
எத்திலின் டை அமீ்னை எத்திலீன் கிளைக்காலாக மாற்றுவது __________
எத்திலீன் கிளைக்காலிலிருந்து டெரிலின் உண்டாக்க ________ உதவுகிறது.
1-புரப்பனாலை. 2-புரப்பனாலிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவும் காரணி எது?
கிளிசரால் பயன்படுவது __________
எண்ணெய் மற்றும் கொழுப்பை நீராற்பகுத்துக் கிடைக்கும் ஆல்கஹால் _________
கிளிசராலிலுள்ள ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகளின் எண்ணிக்கை __________
டைனமைட்டிலுள்ள வினைதிறனுள்ள பகுதிப்பொருள் ___________
எத்திலீன் கிளைக்கால் `PI_(3)` உடன் வினைபுரிந்து கொடுப்பது _____________
கீழ்க்காணும் விளைப்பொருட்களை கவனி. (i) பென்சாயிக் அமிலம் + பார்மிக் அமிலம் (ii) பென்சைல் ஆல்கஹால் + மெத்தனால் (iii) பார்மிக் அமிலம் + பென்சைல் ஆல்கஹால் (iv) பென்சாயிக் அமிலம் + மெத்தனால் இவற்றுள், பென்சால்டிஹைடு மற்றும் பார்மால்டிஹைடு காரம் முன்னிலையில் இணைந்து உருவாகும் குறுக்கு கன்னிசரோ வினையின் விளைப்பொருளைத் தேர்ந்தெடு.
கீழ்க்காணும் வினையை கவனி: `C_(6) H_(5) MgBr + ? underset ((ii) H_(2)O) overset ((i) ஈதர்)(rarr) C_(6) H_(5) CH_(2) OH` மேற்கண்ட வினையின், வினைபடுபொருளை பின்வருவனவற்றில் இருந்து தேர்ந்தெடு.
பின்வரும் வினைகளை கவனி. (i) எஸ்டராக்குதல் (ii) எத்திலீன் டை அமீனிலிருந்து கிளைக்கால் பெறுதல் (iii) பிரிடின் முன்னிலையில் ஆல்கஹால், தயோனில் குளோரைடுடன் வினை (iv) அமோனியாவால் பகுத்தல் வினை இவற்றுள், `S_(N)i` வினை வழிமுறையைப் பின்பற்றும் வினை எது?
கீழ்க்கண்டவற்றுள் ரிசார்சினாலைக் குறிப்பது எது?
பின்வருவனவற்றை கவனி. (i) கிளிசரால்டிஹைடு + டைஹைட்ராக்ஸி அசிட்டோன், (ii) ஆக்ஸாலிக் அமிலம் + டை ஹைட்ராக்ஸி அமிலம், (iii) டார்ட்ரானிக் அமிலம் + டை ஹைட்ராக்ஸி அமிலம், (iv) கிளிசரிக் அமிலம் + டை ஹைட்ராக்ஸி அமிலம் இவற்றுள், `S_(N)i` வினை வழிமுறையைப் பின்பற்றும் வினை எது?
பின்வருவனவற்றுள் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு.
பின்வரும் வினைகளை கவனி: (i) எத்தனால் `H^+ + overset (410K) (rarr)` ஈத்தாக்ஸி ஈத்தேன் (ii) எத்திலீன் டை புரோமைடு `underset (Na_(2) CO_(3)) overset (H_(2)O) (rarr)` எத்திலீன் கிளைக்கால் (iii) எத்திலீன் + HOCl `rarr` எத்திலீன் கிளைக்கால் இவற்றுள், `SN^2` வினை அல்லாதது எது?
எத்தனால் உடன் ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது குரோமியத்தின் ஆக்ஸிஜனேற்ற நிலையில் ஏற்படும் மாற்றம்
பின்வரும் பண்புகளை கவனி: (i) ஒடுக்கப்பண்பு (ii) உடனிசைவுத் தன்மை (iii) + I விளைவு (iv) திசைநோக்கு பண்பு இவற்றுள், பீனாலின் அமிலப் பண்பை விளக்கப் பயன்படும் பண்பு எது?
`CH_(3) - CH = CH_(2) + H_(2)O overset (H_(2) SO_(4)) (rarr) A` எனில் சரியான கூற்று எது?
லூகாஸ் காரணியுடன் வினைபுரியாத சேர்மம் எது?
A-எனும் கரிம சேர்மம், `CH_(3) MgI` உடன் வினைபுரிந்து சேர்க்கைச் சேர்மத்தைத் தருகிறது. அச்சேர்மம் நீராற்பகுப்படைந்து சேர்மம் B-யைத் தருகிறது. சேர்மம் B, விக்டர் மேயர் ஆய்வில் ஊதா நிற உப்பைத் தருகிறது. சேர்மம் A மற்றும் B முறையே _________
பீனால்களின் சிறப்பு மணம் __________
கார்பன் அணுவுடன் OH தொகுதிகள் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தால், அச் சேர்மங்கள் _______ என்றழைக்கப்படுகின்றன.
எத்திலீன் கிளைக்கால் ________ ஆல்கஹால்.
கிளிசராலில் உள்ள ஓரிணைய ஆல்கஹால் தொகுதிகளின் எண்ணிக்கை ________
மெத்தில் ஆல்கஹாலின் வேறு பெயர் என்ன?
எத்தில் புரப்பைல் கார்பினாலின் IUPAC பெயர் யாது?
டெர்ஷியரி பியூட்டைல் ஆல்கஹாலின் IUPAC பெயர் யாது?
பீனாலைப் பற்றிய சரியான கூற்று எது?
பீனாலைப் பற்றிய தவறான கூற்று எது?
வினையூக்கி முன்னிலையில் பீனால் ஹைட்ரஜனேற்றம் அடைந்து தருவது எது?
பின்வருவனவற்றுள் எது கிரிக்னார்டு காரணியுடன் வினைபுரிந்து பின் நீராற் பகுக்கப்பட்டு ஓரிணைய ஆல்கஹாலைத் தரும்?
கிரிக்னார்டு காரணியுடன் கீட்டோன் வினைபுரிந்து, பின் நீராற்பகுப்படைந்து கிடைக்கும் சேர்மம் எது?
பின்வரும் காரணிகளில் எது ஈரிணைய ஆல்கஹாலைத் தயாரிக்க உதவுவது?
ஆல்கஹால்கள் நீர்ம நிலையில் இணைந்து காணப்படுகின்றன, இதற்கான காரணம் ____________
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
ஆல்கஹால்களின் அமிலத்தன்மையின் இறங்கு வரிசை எது?
லூகாஸ் சோதனையில் கலங்கிய தன்மையை விரைவில் தருவது எது?
பின்வருவனவற்றுள் லூகாஸ் சோதனையில் அறைவெப்பநிலையில் கலங்கிய தன்மையைத் தராதது எது?
`1°`ஆல்கஹாலும், சல்போனைல் குளோரைடும் ________ வினைவழி முறையின் மூலம் வினைபுரிகின்றன.
எத்தனால் அலுமினாவுடன் 620K வெப்பநிலையில் புரியும் வினை யாது?
சுவாச பகுப்பாய்வின் மூலம் எத்தனாலைக் கண்டறிய உதவும் காரணி எது?
பின்வருவனவற்றுள் எது அயோடோபார்ம் வினையைத் தராது?
ஐசோபுரப்பைல் ஆல்கஹால், விக்டர் மேயர் ஆய்வில் தரும் நிறம் என்ன?
உயிரியல் மாதிரிகளைப் பாதுகாக்கப் பயன்படும் சேர்மம் எது?
ஒரே கார்பனில் இரண்டு -OH தொகுதிகள் இணைந்திருந்தால் அவை _________ என்று அழைக்கப்படுகின்றன.
பீனாலை, புரோமீன் நீருடன் வினைப்படுத்த _________ கிடைக்கிறது.
நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன் ஊதா நிறத்தைத் தரும் சேர்மம் எது?
எத்திலீன் கிளைக்கால் எத்தனாலைவிட அதிக பாகுத்தன்மையுள்ள சேர்மம் ஏனெனில், _________
டெரிலீன் தொகுக்கப் பயன்படும் சேர்மங்கள் எவை?
எத்திலீன் கிளைக்காலை எத்திலீனாக மாற்றும் கரணி எது?
பின்வரும் எக்காரணி எத்திலீன் கிளைக்காலின் C-C பிணைப்பை பிளக்கிறது?
எத்திலீன் கிளைக்கால் பெர்அயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம் எது?
ஆகாய விமானத்தில் குளிர்விப்பானாகவும், வாகனங்களில் உறைதடுப்பானாகவும் பயன்படும் சேர்மம் எது?
கிளிசராலின் IUPAC பெயர் __________
கிளிசராலில் எத்தனை ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகள் உள்ளன?
கீழ்க்காண்பனவற்றுள் எது எளிய ஈதர்?
டைஎத்தில் ஈதரை சிதைப்பதற்குக் காரணமாக உள்ள காரணி ________
ஈதரின் ஆக்ஸிஜன் அணு __________
லூயியின் அமில, கார கொள்கையின்படி ஈதர்கள் __________
மூலக்கூறுகளுக்கிடைய ஹைட்ரஜன் பிணைப்பு கீழ்க்காண்பவற்றுள் எதில் இல்லை?
எத்தில் அயோடைடு உலர் சில்வர் ஆக்ஸைடும் எதை உண்டாக்குகிறது?
கீழ்க்கண்ட எதற்கு வில்லியம்சன் தொகுத்தல் ஒரு சான்று?
ஈதரை காற்றில் சில மணிநேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள் ________
ஆல்காக்சைடை, ஆல்கைல் ஹாலைடுடன் வினைப்படுத்தி ஈதரைப் பெறலாம். இதுவே __________
பின்வருவனவற்றுள் எது வில்லியம்சன் தொகுப்பு முறையில் அனிசோல் தயாரிக்கும் போது வினைபடுபொருட்கள்?
பின்வரும் கூற்றுகளைக் கவனி. (i) பெட்ரோலுக்குப் பதிலாக ஈதர் பயன்படுகிறது. (ii) ஆக்ஸிஜனில் பிணைப்பில் ஈடுபடா எலக்ட்ரான் இணை இருப்பதால் லூயி காரமாக செயல்படுகிறது. (iii) `CH_(3) OCH_(3) + overset (HI) (rarr) CH_(3) I + CH_(3) OH`. (iv) வில்லியம்சன் தொகுத்தலில் ஆல்காக்சைடுடன், ஆல்கஹாலைப் பயன்படுத்துகிறோம். இவற்றுள், தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
EXERCISE questions and complete solutions for chapter ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் of SURA CHEMISTRY (TAMIL) of Class 12